4 வயது மகனின் விசித்திர ஆசை - 20 அடி உயர சூரியகாந்திச் செடியை வளர்த்த பாசத் தந்தை

4 வயது மகனின் விசித்திர ஆசை - 20 அடி உயர சூரியகாந்திச் செடியை வளர்த்த பாசத் தந்தை
4 வயது மகனின் விசித்திர ஆசை - 20 அடி உயர சூரியகாந்திச் செடியை வளர்த்த பாசத் தந்தை

நான்கு வயது மகனின் விசித்திரமான ஆசையை நிறைவேற்றுவதற்காக 20 அடி உயர சூரிய காந்தி பூச்செடியை வளர்த்த தந்தையின் செயல் மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் தென்பகுதியில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித். இவரது  4 வயது மகன் ஸ்டெல்லன் ஸ்மித். ஸ்டெல்லன் தந்தையான டக்ளஸ் ஸ்மித்திடம் தனக்கு நமது வீட்டை விட உயரமான சூரியகாந்திச் செடி வளர்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பிஞ்சு மனதின் ஆசையை கேட்டு நெகிழ்ந்து போன டக்ளஸ், வட அமெரிக்காவில் 26 அடி வரை சூர்ய காந்திச் செடியை வளர்த்த ஜான் பட்லரிடம் சூர்ய காந்தி விதையை வாங்கி ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் அதனை தனது வீட்டில் நட்டுள்ளார். தற்போது அந்தச் செடி 20 உயர வரை வளர்ந்து டக்லஸ் வீட்டின் கூரையைத் தாண்டி ஒய்யாரமாய் நிற்கிறது. தனது மகனின் ஆசையை நிறைவேற்றிய டக்லஸ், செடியின் அருகே தனது மகனை நிறுத்தி புகைப்படம் எடுத்து அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் பலரும் டக்லஸை பாராட்டியுள்ளனர்.


இது குறித்து டக்லஸ் கூறும் போது “ சூரிய காந்திச் செடி வீட்டின் கூரையை விட சிறுது உயரமாக வளர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் செடி இன்னும் கூடுதலாக 2 அடி வளர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இது இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு  அதன் மரபியியல் தான் காரணம். ஆனால் இது என்ன வகை சூரியகாந்திச் செடி என்று தெரியவில்லை. இந்தச் செடி எனது வாழ்கைக்குள் வந்தது நல்லத் தொடக்கமாக அமைந்தது. காலைப் பொழுது மற்றும் இதர நேரங்களில் ஏணியைப் பயன்படுத்தி இதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com