\
Man Finds 1.2 Kg Gold Nugget Worth ₹1.5 Crore
கோப்புபடம்Reuters

மண்ணில் தெரிந்த மஞ்சள் புள்ளி.. தோண்டியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. 1.2 கிலோ தங்கம் கிடைத்த பின்னணி!

நிலத்தில் தென்பட்ட மஞ்சள் நிறப்புள்ளியைத் தொடர்ந்து நிலத்தை தோண்டிய ஒருவருக்கு, உருளைக்கிழக்கு வடிவில் 1 கிலோவுக்கும் அதிகமாக தங்கக்கட்டி கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on: 

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ளது திபூபுரா (Tibooburra). 1880-களின் பிற்பகுதியில் இருந்து, இப்பகுதியில் நடைபெற்று வரும் தங்கத்தேடல், பல சுற்றுலாப்பயணிகளின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருகிறது. ஆனால், பழங்குடியினரின் நில உரிமை சம்பந்தமான பிரச்னைகள் நடந்து வருவதால், திபூரா காமனில் புதைபடிவங்கள் தேடுவதற்கு அந்நாடு அரசு தடை விதித்திருக்கிறது.

கோப்புபடம்
கோப்புபடம்AI

எனினும், திபூராவில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் (Mount Stuart) மற்றும் கம்வேல் (Gumvale) ஆகிய 2 இடங்களில் மட்டும், கட்டணம் செலுத்தி பொதுமக்கள் புதைப்படிவங்களைத் தேட அனுமதிக்கப்படுகின்றன. அந்தவகையில் தான், உள்ளூர்வாசி ஒருவர் நீண்ட நாட்களாக தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பழைய ஆணிகள், பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், குதிரை லாடங்கள் எனப் பல்வேறு உலோகக் கழிவுகளே அவருக்குக் கிடைத்துள்ளன. பல நாட்களாகத் தேடியும் பெரிதாக எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது.

Man Finds 1.2 Kg Gold Nugget Worth ₹1.5 Crore
கனவுல கூட இது நடக்காது! மொத்தமாக மாறும் தங்கம் விலை? ரஷ்யா செய்தது என்ன?

இந்தச்சூழலில் தான், சமீபத்தில் தங்கம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், தனது மெட்டல் டிடெக்டர் (Metal Detector) கருவியில் கிடைத்த சிக்னலைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டியிருக்கிறார். சிறிய அளவிலான சிக்னலே கிடைத்தபோதும் தொடர்ந்து தோண்டிய அவர், குழியின் நடுவே சிறிய மஞ்சள் நிறப் புள்ளி ஒன்றைக் கண்டுள்ளார். தொடர்ந்து மண்ணை அகற்றியபோது, உருளைக்கிழங்கு வடிவத்தில் 1.2 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட தங்கக்கட்டி அவருக்கு கிடைத்துள்ளது. இதைப் பார்த்த அவர், மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தத் தங்கக்கட்டி சுமார் 1.2 கிலோ எடை கொண்டது. இதில் சுமார் 940 கிராம் சுத்தமான தங்கம் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதன் தங்க மதிப்பு மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 1 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகம். அதேசமயம், இந்தத் தங்கக்கட்டி தனியார் சேகரிப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்யப்பட்டால், இதன் விலை 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை செல்லக்கூடும் என தங்க மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தங்கக்கட்டிக்கு, அது கிடைத்த பகுதியின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ‘டிபூபுரா ஸ்பட்’ (Tibooburra Spud) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தங்கம் தேடும் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர்களுக்குக்கூட ஒரு கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள தங்கக்கட்டி கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே உள்ளது. இந்தச்சூழலில் தான், சிறிய மஞ்சள் புள்ளியாகத் தொடங்கிய தேடல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டமாக மாறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Man Finds 1.2 Kg Gold Nugget Worth ₹1.5 Crore
துபாய்னா சும்மாவா? 24 காரட் தங்கத்தில் நடைபாதை.. வியப்பில் உலகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com