இந்தியா இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில் சீனாவுடன் இணைப்பை பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு உத்திகளை முன்னெடுத்துள்ளார். மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு வைத்துள்ள கோரிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுற்றுலா பயணிகளின் கனவு பிரதேசத்தில் ஒன்றாக திகழ்கிறது மாலத்தீவு. இந்திய சுற்றுலா பயணிகளின் பார்வை மாலத்தீவின் மீது இருந்த நிலையில் தற்போது அதிகளவிலான சுற்றுலா பயணிகளை சீனா தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர், வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். மேலும் சீனாவை நெருங்கிய கூட்டாளி என்றும் மாலத்தீவின் வளர்ச்சிக்கான நட்பு நாடுகளில் சீனாவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு முன் மாலத்தீவின் முதன்மை சந்தையாக சீனா இருந்ததாகவும் இந்த நிலையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.