\
Malaysian gold medalist loses his arm in a crash
Muhammad Hafizuddin Roslin Ai

தங்கம் வென்ற வீரருக்கு நேர்ந்த சோகம்.. ஒலிம்பிக் கனவில் விழுந்த பேரிடி.. கோர விபத்தில் பறிபோன கை!!

சர்வதேச அளவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இளம் வீரருக்கு, தற்போது நேர்ந்துள்ள சோகம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம்..
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

மலேசியாவைச் சேர்ந்த 21 வயதான பளுதூக்கும் வீரர் முகமது ஹபிசுதீன் ரோஸ்லின். இவர் கடந்த ஜூலை மாதம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 88 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 345 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் போட்டியின் சாதனையையும் முறியடித்திருந்தார். மேலும், ஸ்னாட்ச் பிரிவில் 162 கிலோ எடையைத் தூக்கி மலேசிய தேசிய சாதனையையும் படைத்திருந்தார். இதனால், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்குப் பதக்கம் வென்று தரக்கூடிய முக்கிய வீரர்களில் ஒருவராகவும் இவர் பார்க்கப்பட்டார்.

olympic
olympicreuters

இந்நிலையில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு ஹபிசுதீன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சையின்போது, அவரது வலது கையைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் கருதி முழங்கைக்கு மேலே அவரது வலது கையை மருத்துவர்கள் அகற்ற்றியுள்ளனர். இந்தச் செய்தி மலேசிய விளையாட்டு உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

malaysia
malaysiareuters

இந்நிலையில் சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் அவருக்கு தெவ்வாயான அணைத்து உதவிகளையும் செய்து வருவதுடன்.. அவருக்கு எதிர்காலத்தில் பளுதூக்குதல் விளையாட்டில் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இளம் வீரர்,கையையே இழக்கும் அளவுக்கு விபத்தில் சிக்கியிருப்பது மலேசிய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaysian gold medalist loses his arm in a crash
இடைக்கால தேர்தல்; ரூ4000 கோடி செலவு.. முட்டாளாக உணர்கிறேன் - எலான் மஸ்க் வேதனை