கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.. பைடனை சாடிய ட்ரம்ப்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீயால் பல கட்டிடங்கள் அழிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த செயற்கைகோள் உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.
தெற்கு கலிபோர்னியாவில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகின்றது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பல்லாயிரக்கணக்கான் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் பல கட்டிடங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி காலை தெற்கு கலிபோர்னியா காட்டுப்பகுதியில் தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது. வேகமாக வீசிய காற்றினால் தீயானது மளமளவென்று அப்பகுதி முழுவதும் பரவி 24 மணிநேரத்திற்குள்ளாக தீயானது சுமார் 3000 ஏக்கர் பகுதியை அழித்து நாசம் செய்துள்ளது. இதனால் பல கட்டிடங்களும் காடுகளும் அழிவை சத்தித்து வருகின்றன. இதில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த சுமார் 50,000 மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை காலி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தீயை அணைக்க பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து அரசாங்கம் செய்து வந்தாலும், அப்பகுதியில் பலத்த காற்று வீசிவருவதால் தீயானது மேலும் பரவக்கூடும் என்ற அச்சத்தினால் அப்பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர். பரவி வரும் காட்டுத் தீயானது வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பல மிருகங்களும் பறவைகளும் அழிவை சந்தித்து வருகிறது. இக்கொடிய தீயை அணைக்க அந்நாட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீ மற்றும் புகையின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. காட்டுத்தீ பரவிய பகுதியை செயற்கைக்கோளானது படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தலைவர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்பாளார்களுக்கு செயற்கைக்கோள்களில் இருந்து முக்கியமான தகவல்கள் வழங்கப்படுகின்றன.
உதவும் செயற்கைக்கோள்!
காட்டுத்தீயை கண்காணிக்க NOAA உதவி செய்ய இரண்டு வெவ்வேறு வகையான செயற்கைக்கோள் விண்வெளியில் செயல்பட்டு வருகிறது.
1.ஜியோஸ்டேஷனரி செயல்பாட்டு சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் (GOES)
2. கூட்டு துருவ செயற்கைக்கோள் அமைப்பு (JPSS) .
GOES செயற்கைக்கோள்
GOES செயற்கைக்கோள்கள் பூமியில் ஒரே புள்ளிக்கு ( 22,236 மைல்களில் இருந்து ஜியோசின்க்ரோனஸ் ஆர்பிட் என அழைக்கப்படும் (35,786 கிலோமீட்டர்) மேலே சுற்றி வருகிறது.
JPSS செயற்கைக்கோள்
JPSS பூமிக்கு மேலே 512 மைல் (824 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள துருவ, புவி ஒத்திசைவற்ற சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது,
இந்த இரண்டு செயற்கைக்கோள்களிலும் உள்ள கருவிகளில் வெவ்வேறு வடிப்பான்கள்(filter) மற்றும் நிறமாலை பட்டைகளைப் பயன்படுத்துவதன் மூலம் , நெருப்பு மற்றும் புகையின் நிகழ்நேர வளர்ச்சி மற்றும் இயக்கத்தைக் காட்ட சக்திவாய்ந்த படங்களை உருவாக்க முடியும் இந்த படங்களை அடிப்படியாகக்கொண்டு காட்டுதீயை கலிபோர்னியா அரசாங்கம் கட்டுக்கொள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது.
பைடனை சாடிய ட்ரம்ப்!
தீயை அணைப்பதற்கான தண்ணீர் வளம் இல்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பதியில், “தீயை அணைப்பதற்கு தண்ணீரே இல்லை. பணமும் இல்லை. இத்தகைய நிலையில் தான் ஆட்சியை என்னிடம் விட்டுச் செல்கிறார் ஜோ பைடன். நன்றி ஜோ!” என்று விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.