பிரிட்டன்: ஆட்சியைப் பிடித்தது தொழிலாளர் கட்சி.. தோல்விக்கு பொறுப்பேற்பதாக ரிஷிசுனக் அறிவிப்பு!

பிரிட்டனில் 14 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி தற்போது தோல்வியைத் தழுவியுள்ளது. தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்கிறது.
கெயர் ஸ்டாமர்
கெயர் ஸ்டாமர் pt web

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் ஏறத்தாழ 4.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது.

பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையேயான போட்டியில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை பின்னடைவை சந்தித்துள்ளது.

தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டாமர் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு என ஏற்கெனவே கருத்துக்கணிப்பில் தகவல் வெளியான நிலையில், தற்போது பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்துள்ளது கெய்ர் ஸ்டார்மனின் தொழிலாளர் கட்சி.

கெயர் ஸ்டாமர்
இந்த தலைமுறையின் மிகச் சிறந்த பௌலர் ’ஜஸ்ப்ரித் பும்ரா’! T20WC தொடரின் நாயகன்.. தேசத்தின் நாயகன்..!

650 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் பெரும்பான்மைபெற 326 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும். தற்போதைய நிலவரத்தின் படி , தொழிலாளர் கட்சி 357 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி 170க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

14 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை இழந்த கன்சர்வேடிவ் கட்சி

பிரிட்டனில் 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்தது. 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

கெயர் ஸ்டாமர்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!

தொழிலாளர் கட்சியை சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளார். இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் கலந்துகொண்ட தொழிலாளர் கட்சியின் ஸ்டார்மர், “மாற்றம் இப்போது தொடங்குகிறது” என தெரிவித்தார். தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக்கொண்ட ரிஷி சுனக், மக்கள் நிதானமான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்றும், தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com