பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்... பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் அதிகம் பேர் களம் காண்பது இதுவே முதன்முறையாகும்..
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!புதிய தலைமுறை

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள், கறுப்பினத்தவர்களுக்கு முன்பை விட அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக பேர் போட்டியிடும் தேர்தலாகவும் இது மாறியுள்ளது. உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் களத்தில் உள்ளனர்.

சீர்காழியில் பிறந்து இங்கிலாந்தில் கணினி நிறுவனம் நடத்தி வரும் ஜாஹிர் உசேன், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி சார்பில் குரோய்டன் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி அவர் வெளியிட்ட வீடியோவில், பொறுப்புமிக்க பிரதிநிதியாக இருந்து தொகுதியின் வளர்ச்சிக்கு பணியாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்.

தொழிலாளர் கட்சி சார்பில் களமிறங்கும் கிரிஷ்னி ரேஷகரோன் சென்னையில் வளர்ந்தவர். பிரிட்டனில் வாழும் 5 லட்சம் தமிழர்களின் குரலாக ஒலிப்பேன் என தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் குரல் வலுவாக ஒலிக்கும் என்பதால், தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவையைச் சேர்ந்த சுதா தெரிவிக்கிறார்.

பிரிட்டன்
பிரிட்டன் முகநூல்

14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் சூழல் உள்ளதால், இலங்கை தமிழர்களின் உரிமைகள் காக்கப்படும் என மூத்த வழக்கறிஞர் கணநாதன் தெரிவித்தார். பிரிட்டனில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் பிரதிநிதியாக தமிழர்களின் குரல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒலிப்பது காலத்தின் கட்டாயம்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!
US Election|”நான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன்” - ட்ரம்பிடம் தடுமாறியது குறித்து பைடன் சொன்ன விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com