மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனிPt web

ஈரான்| அடுத்த உச்ச தலைவராகும் காமேனியின் மகன்? யார் இந்த மொஜ்தபா காமேனி?

ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலிகாமேனியின் மகன் மொஜ்தபா, அடுத்த தலைவராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on
Summary

1979 புரட்சிக்குப் பிறகு வாரிசு அரசியலை எதிர்த்த ஈரான், தற்போதைய நெருக்கடி சூழலில் காமேனியின் மகன் மொஜ்தபாவை தேர்வு செய்ய புரட்சிகர பாதுகாப்புப் படை அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுத்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தசூழலில் காமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரானின் அதிஉயர் தலைவராக யார் வருவார் என்பது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. இந்த சூழலில், அந்நாட்டின் மூத்த மதத்தலைவர் அலிரேசா அராபி ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், புதிய உச்சத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான குழுவும் அமைக்கப்பட்டது.

irans Ali Khamenei death first supreme leaders ancestors lived in india
அயதுல்லா அலி காமேனிpt web

இந்தசூழலில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலிகாமேனியின் 56 வயது மகன், மொஜ்தபாகாமேனி, அடுத்த தலைவராகத் தேர்வுசெய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஜ்தபா காமேனி
2-ஆம் உலகப்போருக்கு பின்.. மீண்டும் அமெரிக்கா கையிலெடுத்த ஆயுதம்! சுக்குநூறான ஈரான் போர்க்கப்பல்!

யார் இந்த மொஜ்தபா காமேனி..?

அரசுமற்றும் மதரீதியான அதிகாரபூர்வப்பதவிகள் எதையும் வகிக்காத போதிலும்,கடந்த 20 ஆண்டுகளாகத் தந்தையின்அலுவலகத்தை நிர்வகித்ததன் மூலம்திரைமறைவில் ஈரானின் அதிகாரமையமாகத் திகழ்ந்தவர் மொஜ்தபா.1980களில் நடந்த ஈரான்-ஈராக் போரில்நேரடியாகப் பங்கேற்ற இவர், புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நீண்டகாலமாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளார். 2009ஆம் ஆண்டு ஈரானியப் போராட்டங்களை ஒடுக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனிPt web

1979 புரட்சிக்குப் பிறகு வாரிசு அரசியலை ஈரான் எதிர்த்துவந்தாலும், தற்போதைய நெருக்கடி சூழலால் மொஜ்தபவை உயர் தலைவராக தேர்வு செய்ய புரட்சிகர பாதுகாப்புப் படை அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு இவரது நியமனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மொஜ்தபா காமேனி
’ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது..’ உலகிற்கே 'லாக்டவுன்' போட்ட ஈரான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com