சுக்குநூறான அமெரிக்காவின் கனவு: கருத்து கணிப்புகள் கொடுத்த SHOCK.. கனடாவின் முடிவின் பின்னணி என்ன?
ஆல்பர்ட்டா மாகாணம் தனிநாடாக செயல்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் கனடாவோடு இணைந்திருக்க விரும்புவதாக கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பிரிவினையை ஆதரித்தாலும், கனடா நாடாளுமன்றம் மற்றும் பிற மாகாணங்களின் ஒப்புதல் இல்லாமல் பிரிவினை சாத்தியமில்லை.
வட அமெரிக்க நாடான கனடாவில் அதிக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கொண்ட மாகாணமாக ஆல்பர்ட்டா (alberta) மாகாணம் திகழ்ந்து வருகிறது. ஆனால் இங்கிருந்தும் கிடைக்கும் வருமானத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்வதாகவும், மாநிலத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் அம்மாகாணத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு அமைப்புகள் இணைந்து கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக வேண்டும் என்று ஒரு இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிவினைவாதிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாக செயல்பட வேண்டுமா? கனடாவோடு இணைந்திருக்க வேண்டுமா என்பது பற்றி பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும் என ஆல்பர்ட்டா மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) அறிவித்தார்.
இந்த வாக்கெடுப்பு கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த வாக்கெடுப்பு குறித்த கருத்து கணிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வாக்களித்த பெரும்பாலான மக்கள் தாங்கள் தொடர்ந்து கனடாவோடு இணைந்து இருக்க விரும்பி வாக்களித்துள்ளதாக Ipsos போன்ற கருத்து கணிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன. அதாவது 10-ல் 7 பேர் ஆல்பர்ட்டா கனடாவோடு இணைந்திருக்க விரும்பம் தெரிவித்துள்ளனர். இது பிரிவினைவாத கோரிக்கையை முன்னெடுத்த தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வலதுசாரி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த பிரிவினைக்கு பகிரங்கமாக தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்க அரசின் டிரம்ப் நிர்வாகம் ஆல்பர்ட்டா கனடாவில் இருந்து பிரிந்தால், அங்கிருந்து அமெரிக்கா வழியாகப் பசிபிக் பெருங்கடலுக்கு எண்ணெய் குழாய்களை அமைப்பதற்கும், நேரடி வர்த்தகம் செய்வதற்கும் விருப்பம் காட்டியது .இதனால் இந்த முடிவு டிரம்ப் நிர்வாகத்துக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கனடாவின் ஒரு மாகாணம் நாட்டில் இருந்து பிரிய வேண்டும் என்றால் கனடா நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் மற்றும் பெரும்பாலான பிற மாகாணங்களின் ஒப்புதலும் தேவைப்படும். ஆனால் ஜனநாயக நாடான கனடாவில் ஒரு மாகாணம் பிரிவினைக்கு ஒப்புதல் தெரிவித்தால் அதனை பிற மாகாணங்களும் ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

