கஜகஸ்தான்: 72 பயணிகளுடன் வெடித்து சிதறிய விமானம்; 42 பேர் உயிரிழப்பு! #ShockingVideo
அஜர்பைஜான் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது திடீரென விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கஜகஸ்தான் அருகில் உள்ள அக்டாவ் பகுதியில் தரையிறங்கிய போது, விமானம் வெடித்து சிதறியுள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு சில மணி நேரமாக வானில் வட்டமடித்ததாக கூறப்படுகிறது.
விமானி நீண்ட நேரமாக விபத்தை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் கடைசி வரை இயந்திர கோளாறை சரி செய்ய முடியாததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இந்நிலையில், விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
72 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டே கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.