\
Just One Drone... NATO on Alert! ‘Red Alert’ in the Skies!
DroneReuters

ஒரே ஒரு ட்ரோன்.. பதற்றத்தில் NATO! வான்வெளியில் ‘Red Alert’! அதிர்ந்த ருமேனியா!

ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு பொருள் வந்தால் என்ன ஆகும்? நிலத்தில் வந்தால் ராணுவம் தடுக்கலாம்.. கடலில் வந்தால் கடற்படை களமிறங்கும்... ஆனால் வானில் பறந்து வந்தால்? இப்படியொரு பதற்றமான சூழ்நிலையைத்தான் ருமேனியா தற்போது எதிர்கொண்டுள்ளது. என்ன நடந்தது?
Published on

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

ருமேனியா, உக்ரைனுடன் 614 கிலோமீட்டர் நீளமுள்ள தரைவழி எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்ய ட்ரோன்கள் பலமுறை ருமேனிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. அதேபோல், முக்கிய வர்த்தக மற்றும் எரிசக்தி வழித்தடங்களைக் கொண்ட கருங்கடல் பகுதியில் மிதக்கும் கடல் கண்ணிவெடிகளும் அந்நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கவில்லை. ருமேனிய ரேடார்கள், அண்டை நாடான மால்டோவா வழியாக ட்ரோன் நாட்டுக்குள் நுழைந்ததை கண்டறிந்ததாகவும், தென்கிழக்கு ருமேனியாவின் கலாட்டி நகருக்கு வடக்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் அது இருந்ததாகவும் தெரிவித்தது.

Drone
DroneReuters

ட்ரோனை ரேடார் மூலம் கண்காணித்த F-18 விமானத்துக்கு, அதை தாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதிகாலை 5.01 மணியளவில் ட்ரோன் பாதுகாப்பாக சுட்டுவீழ்த்தப்பட்டதாக அமைச்சகம் கூறியது. அதன் பாகங்கள் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், ருமேனிய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று ரஷ்ய ட்ரோன்களை அந்நாட்டு F-16 போர் விமானங்கள் முதன்முறையாக சுட்டுவீழ்த்தின.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட இரவுநேர தாக்குதலின்போது ரஷ்ய ட்ரோன் ஒன்று கலாட்டி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.

Just One Drone... NATO on Alert! ‘Red Alert’ in the Skies!
'மீண்டும் உணவு லாரியில் பதுங்க வேண்டிய நிலை வரும்' - டிரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com