\
Iran Warns Trump: ‘You May Have to Hide in a Truck Again
Mojataba Khamenei & Trump reuters

'மீண்டும் உணவு லாரியில் பதுங்க வேண்டிய நிலை வரும்' - டிரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி அல்ல; டிரம்ப் வீண் பேச்சை நிறுத்தி முதலில் தனது பாதுகாப்பை கவனிக்க வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

செய்தியாளர் - M. மீரா

ஈரான் போரில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானைத் தோற்கடித்த பிறகு ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிவித்தார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான இந்த நீரிணையை அமெரிக்கா கைப்பற்றும் என்ற அவரது பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

boats in hormuz
boats in hormuz reuters

இந்தக் கருத்துக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா–ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத் தலைவர் இப்ராஹிம் அசிசி (Ebrahim Azizi) டிரம்பை கடுமையாக எச்சரித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது என்றும், அது தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

iran war
iran war reuters

ஒரு ட்வீட், விமானம் தாங்கி போர்க்கப்பல், நிர்வாக உத்தரவு அல்லது தேர்தல் பிரசாரம் மூலம் ஹார்முஸ் நீரிணையை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹார்முஸ் நீரிணை குறித்து “வீண் பேச்சுகளை” தவிர்த்துவிட்டு, முதலில் தனது பாதுகாப்பு குறித்து டிரம்ப் கவலைப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இல்லையெனில், மீண்டும் உணவு விநியோக லாரியில் மறைந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Iran Warns Trump: ‘You May Have to Hide in a Truck Again
ஸ்பெயின் காட்டுத் தீ... 15,000 ஹெக்டேர் எரிந்து நாசம்.. வீடுகளை விட்டு வெளியேறிய குடும்பங்கள்!!

கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து டிரம்ப் திரும்பியபோது, ஈரானால் உயிருக்கு ஆபத்து என்ற அச்சுறுத்தல் காரணமாக அங்காராவிலிருந்து புறப்படும்போது, டிரம்ப் முதலில் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் ஏறியதாகவும், பின்னர் ரகசியமாக சிறிய C-32A ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

trump
trumpreuters

அடுத்த சில நிமிடங்களில், ஊடகத்தினரைச் சுமந்து வந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமும் அங்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்திரிகையாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் டிரம்ப் வழக்கமான விமானத்தில் தங்களோடுதான் பயணிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில், விமான நிலைய உணவு விநியோக வாகனம் (Catering truck) மூலம் அவர் இரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இந்த மோதல் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையாக மட்டும் இல்லாமல், உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Iran Warns Trump: ‘You May Have to Hide in a Truck Again
லாரியில் பதுங்கி தப்பியதை.. ஒப்புக்கொண்ட அதிபர் ட்ரம்ப்! உடன் பயணித்தவர்களை ஆபத்தில் விட்டாரா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com