\
JD Vance Confirms No Deal in Iran Talks After Pakistan Visit
ஜேடி வான்ஸ்x

“ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி” - ஜே.டி வான்ஸ்.. மீண்டும் போர் சூழல்!

ஈரனுடனான நேரடியான பேச்சுவார்த்தக்குப் பிறகு எவ்விதமான உடன்பாடும் ஏற்படவில்லை என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக் குழு பாகிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்பியிருக்கிறது.
Published on

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 1 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் 2 வாரங்களுக்கு ஈரானுடனான போரை நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து, நிரந்தப் போர் நிறுத்ததுக்கான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தான், ட்ரம்பின் கருத்தை உறுதிசெய்திருந்தது ஈரான். இதனால், மத்திய கிழக்கில் தற்சமயம் அமைதி திரும்பியிருக்கிறது.

ஈரான், அமெரிக்கா
ஈரான், அமெரிக்காx page

முன்னதாக, போர் நிறுத்ததுக்கான 10 நிபந்தனைகள அமெரிக்காவிடம் ஈரான் முன்வைத்த நிலையில், அவை பரிசீலிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். 10 நிபந்தனைகளில் ஒன்றான, லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பதாகும், ஆனால் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து அதிபர் மசூத் பெஷேஷ்கியான் லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள், அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல். இஸ்ரேலின் இத்தகைய தொடர் தாக்குதல்கள் நடைபெறுமானால், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும். எங்கள் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கத் தயங்காது எனத் தெரிவித்திருந்தார்.

JD Vance Confirms No Deal in Iran Talks After Pakistan Visit
ஏழை - பணக்கார நாடுகள் இடைவெளி அதிகரிப்பு.. ஐ.நா. அறிக்கை!

இந்த சூழலில், ஒரு நாள் தாமதமாக ஈரான் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபத்தில் நேற்று தொடங்கியது. இதற்காக, இதற்காக, அமெரிக்க தரப்பில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு இஸ்மாபாத் வந்தது. இதில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இடம்பெற்றிருந்தன. ஈரான் தரப்பில் இருந்து, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணை அமைச்சர் மஜித் த்க்த் ரவஞ்சி ஆகியோர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா தரப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்reuters

அதன்படி, நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தை 21 மணி நேரம் நடைபெற்றது. இதில், ஈரான் அனுசக்தி திட்டங்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தான், பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. நாங்கள் நிபந்தனைகளை மிகத் தெளிவாக எதுத்துரைத்தோம். ஈரான் அனு ஆயுத்தத்தை கைவிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், ஈரான் எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இது ஈரானுக்கு கெட்ட செய்தி. எவ்வித உடன்பாடும் ஏற்படாமலேயே அமெரிக்கா திரும்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் போர் சூழல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

JD Vance Confirms No Deal in Iran Talks After Pakistan Visit
பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை.. தீவிரமாகும் போர்.. ஈரானுக்கு ரகசியமாக ஆயுதங்களை அனுப்பும் சீனா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com