சுனாமி எச்சரிக்கை: ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் உதவிக்கான தொடர்பு எண்கள் அறிவிப்பு!

ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கடலில் சுனாமி ஏற்பட்டு ராட்சத அலைகள் தாக்கின. இந்நிலையில் தற்போது இந்திய தூதரகம் அவசர எண்களை அறிவித்துள்ளது.
ஜப்பான் நிலநடுக்கம்
ஜப்பான் நிலநடுக்கம்pt web

ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு பகுதியில் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், அடுத்த ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவானது. பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்த கட்டடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் கட்டடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் குவிந்தனர்.

சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா உள்ளிட்ட மாகாணங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்pt web

இஷிகாவா கடற்கரையில் சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு ஆழிப்பேரலை எழும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த கடற்கரையோர மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகரில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி வந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பாக மக்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

உதவி தேவைப்படும் நபர்களுக்காக இந்திய தூதரகம் ஐந்து தொடர்பு எண்கள் மற்றும் இரண்டு மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.

+81-80-3930-1715 (Mr. Yakub Topno)

+81-70-1492-0049 (Mr. Ajay Sethi)

+81-80-3214-4734 (Mr. D.N. Barnwal)

+81-80-6229-5382 (Mr. S. Bhattacharya)

+81-80-3214-4722 (Mr. Vivek Rathee)

sscons.tokyo@mea.gov.in

offfseco.tokyo@mea.gov.in

அரசுடன் தொடர்பில் உள்ள தூதரக அதிகாரிகள், அரசாங்கத்தால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com