ராஜினாமா
ராஜினாமா முகநூல்

பதவி ஏற்க உள்ள ட்ரம்ப்; பதவியை ராஜினாமா செய்த அரசு வழக்கறிஞர்!

அமெரிக்க நீதித் துறையின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்த அரசு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த அரசு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா
தென்கொரியா | விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க நீதித் துறையின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்த அவர், தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை மாற்ற முறைகேட்டில் ஈடுபட்டது, அரசு ஆவணங்களை கையாடல் செய்தது ஆகியவை தொடர்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, ட்ரம்பிற்கு எதிராக ஜாக் ஸ்மித் வழக்கு தொடர்ந்திருந்தார். தான் அதிபராக பதவியேற்றபின், ஜாக் ஸ்மித் பணியில் இருந்து நீக்கப்படுவார் என ட்ரம்ப் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜாக் தற்போது ராஜிநாமா செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com