மீண்டும் தொடங்கிய போர்.. லெபனானில் உள்ள ஹெஸ்பெல்லா அமைப்பினர் மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்!

லெபனானில் உள்ள ஹெஸ்பெல்லா அமைப்பினரை குறிவைத்து, இஸ்ரேல் படையினர் வான்வழியாகவும், பீரங்கிகள் மூலமும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது
இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது file

ஈரான் ஆதரவு குழுவான ஹெஸ்பெல்லா அமைப்பினர், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக துணை நின்று இஸ்ரேலை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஹெஸ்பெல்லா அமைப்பினரை குறிவைத்து அழிக்கும் நடவடிக்கைகளை, இஸ்ரேல் படையினர் துரிதப்படுத்தி உள்ளனர்.

israel war
israel warpt desk

அதன் பேரில், தெற்கு லெபனானில் நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையில் நடைபெற்று வரும் போரில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது
முடிந்த கெடு.. தரைவழித் தாக்குதலை தொடங்கிய Israel... காஸாவில் உச்சகட்ட பதற்றம்!

போர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், குண்டு பொழியும் சத்தமும், ஆம்புலன்ஸ் சைரன் சத்தமும் காஸா பகுதியில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. இது, அங்குள்ள மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com