\
Israeli rejects US-Iran peace agreement
ட்ரம்ப், நெதன்யாகுராய்ட்டர்ஸ்

வெடித்த புதுவித மோதல்..? ட்ரம்பை எதிர்க்கும் நெதன்யாகு..? உற்றுநோக்கும் உலக நாடுகள்..!

அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
Published on

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது...இந்த விவகாரத்தில் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் உருமாறியது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. இதனைக் குறிப்பிட்டு ஈரான் போர் முடிவடைவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். மேலும், போர் முடிவடைந்ததாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

trump
trumpweb

தவிர, அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகளும் வெளியாகி உள்ளன. அதன்படி, போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறத்தல் மற்றும் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கட்டுப்பாடுகள், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல், பேச்சுவார்த்தைகளின்போது புதிய அமெரிக்கத் தடைகள் இல்லாதது உள்ளிட்ட 14 அம்சத் திட்டங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்தாக உள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Israeli rejects US-Iran peace agreement
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் | ஒப்பந்தத்தில் 14 அம்சத் திட்டங்கள்.. யாருக்குச் சாதகம்?

இந்த நிலையில், அமெரிக்க - ஈரான் ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், ”ஈரானுக்கு எதிராக அதிபர் ட்ரம்பின் ஒப்பந்தம், எங்களைக் கட்டுப்படுத்தாது. இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அடிபணியவில்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசம். நாட்டின் பாதுகாப்பு முடிவுகள் அமெரிக்காவில் அல்ல, ஜெருசலேமில்தான் எடுக்கப்படும். நமது பாதுகாப்பை உறுதி செய்யாத, மேலும் எந்த வகையிலும் நம்மைக் கட்டுப்படுத்தாத இந்த ஒப்பந்தத்தில் நாம் பங்காளிகள் அல்ல. ஈரானுடன் உருவாகி வரும் இந்த ஒப்பந்தம் ஒரு மூலோபாயத் தோல்வியாகத் தெரிகிறது.

இது, வரும் ஆண்டுகளில் இஸ்ரேல் இராஜதந்திர, இராணுவ மற்றும் சட்டப் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலையை உருவாக்கும். இந்தப் போராட்டங்களை ஒரு பரந்த சியோனிச அரசாங்கத்தால் மட்டுமே வழிநடத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நெதன்யாகுவிடம் அறிவுறுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும் இடையே சமீபகாலமாக முட்டல் மோதல் தொடங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Israeli rejects US-Iran peace agreement
அமெரிக்க அதிகாரிகளை உளவு பார்த்த இஸ்ரேல்? விரிசலில் ட்ரம்ப் - நெதன்யாகு நட்பு?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com