இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 10 நாட்களை கடந்தும் காஸாவில் கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், வடக்கில் இருந்து தெற்கு காஸாவுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
வடக்கு காஸாவில் தரைவழி தாக்குதலை நடத்துவதற்கு ஏதுவாக ஆயிரத்திற்கும் அதிகமான பீரங்கிகளை எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தச் சூழலில் போரை நிறுத்துவதற்கான சூழல் இல்லை என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக 'தி ஸ்பெக்டேட்டர் இண்டெக்ஸ்' செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாக்குதல் நடைபெறும் பகுதியில் இருந்து வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கும், மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்வதற்கும் காஸா பகுதியில் சாதகமான சூழ்நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பிடம் 199 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.