
இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் படையினர், இஸ்ரேலிய மக்கள் பலரையும் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து காஸா மீது மழைபோல் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் காஸாவில் இருந்து பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், குடிநீர், மின் இணைப்பு இன்றி இருளில் மூழ்கியது. அதேநேரம் ஹமாஸ் படையினரும் தாக்குதலை தீவிரப்படுத்தவில்லை.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிப்பான் ஒலியெழுப்பியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ மீது ஹமாஸ் படையினர் மூன்று மூறை ஏவுகணை வீசியதாகவும், அதனை அயர்ன் டோம் அமைப்பு இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
எனினும் ஒரு ஏவுகணை தாக்குதலில் வீடு ஒன்று சேதமானதாகவும், அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.