”பாலஸ்தீனியர்களை நம் வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்யவில்லையா?” - இஸ்ரேலிய வரலாற்று ஆசிரியர் கைது!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் செயல்களை நியாயப்படுத்தியதாகக் கூறி, பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ்pt web

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 30 நாட்களைக் கடந்தும் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், ஹமாஸுக்கு அரபு நாடுகள் ஆதரவளித்துள்ளன. இந்தப் போரில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், காஸாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர்முகநூல்

இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தீவிரவாத செயல்களை நியாயப்படுத்தியதாகக் கூறி மத்திய நகரமான பெட்டா திக்வாவில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்த வரலாற்று ஆசிரியர், நவம்பர் 10 கைது செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: "ரத்த வாந்தி எடுத்தபோதும் பீர் குடிப்பதை நிறுத்தல"-நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து பகீர் தகவல்

இஸ்ரேலிய வீரர்கள், பாலஸ்தீனியர்களை பாலியல் வன்கொடுமை செய்யவில்லையா? அவர்கள் 1948ஆம் ஆண்டிலிருந்து உள்ளனர். மேலும், இது பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை’ என்று அந்த வரலாற்று ஆசிரியர் இதர ஆசிரியர் குழுவிற்கு செய்தி பகிர்ந்துள்ளார். மேலும், போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கும் ஆன்லைன் பதிவுகளை அவர் பகிர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருமுறை இஸ்ரேலிய விமானப்படை விமானிகளை ’குழந்தை கொலைகாரர்கள்’ என்று குறிப்பிட்டதாகவும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ராணுவத்தில் பணியாற்ற வேண்டாம்’ என வலியுறுத்தியதாகவும், ’முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை விமானிகள் நன்கு அறிவார்கள். இன்னும் அவர்கள் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுத்தனர்’ என அவர் விமானிகளைப் பற்றி தாக்கி எழுதியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆசிரியர் கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்ததாகவும், பாதுகாப்புப் படையினரை இழிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கார் மோதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் 'பயங்கரவாதி அல்ல' என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்முகநூல்

இதைத் தொடர்ந்து, அவர் ஹமாஸை ஆதரிப்பதுபோல் எழுதியுள்ளதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் பெட்டா திக்வா நகராட்சி மற்றும் கல்வி அமைச்சகம், ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது. அதனை தொடர்ந்து, ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: தமிழ்நாடு to பிரிட்டன்: உயர் பதவிகள்.. சர்ச்சை பேச்சுகள்.. திடீர் நீக்கம்; யார் இந்த சுயெல்லா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com