"ரத்த வாந்தி எடுத்தபோதும் பீர் குடிப்பதை நிறுத்தல"-நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து பகீர் தகவல்

நடிகர் கலாபவன் மணியின் இறப்புக்கான உண்மையான காரணம் வெளியாகி உள்ளது.
கலாபவன் மணி
கலாபவன் மணிபுதிய தலைமுறை

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. இவர் ஜெமினி’, ’புதிய கீதை’, ‘குத்து’ ’எந்திரன்’, ’பாபநாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி திருச்சூர் சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. திருச்சூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை நடத்தியதில், அவரது ரத்தத்தில் எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து, மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறாக இருந்ததால் குழப்பம் நீடித்தது. அவர் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பினர். இதனால் கலாபவன் மணியின் குடும்பத்தார், இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து, அதன் அறிக்கையை 2019 டிசம்பரில் தாக்கல் செய்தது. அதில், ’கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியன் காரணமாக ஏற்பட்ட கல்லீரல் நோயால்தான் அவர் மரணத்தை தழுவியிருந்தார்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க: தமிழ்நாடு to பிரிட்டன்: உயர் பதவிகள்.. சர்ச்சை பேச்சுகள்.. திடீர் நீக்கம்; யார் இந்த சுயெல்லா?

இந்நிலையில் கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கலாபவன் மணி, தொடர்ந்து அதிகளவு பீர் குடித்ததால், பீரில் இருந்த மெத்தனால் ஆல்கஹால் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்துள்ளது. தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணமாகும். பீரில் மிகக்குறைந்த அளவே மெத்தனால் ஆல்கஹால் இருந்தாலும், தொடர்ந்து பீர் குடித்ததால் நடிகர் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு மெத்தனால் ஆல்கஹால் சேர்ந்துள்ளது.

தீவிர நீரிழிவு நோயாளியான கலாபவன் மணி இதற்காக காலை, மாலை என இருவேளையும் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். இந்த மாத்திரைகள் சாப்பிடும்போதும் பீர் அருந்தியதால் உடலில் வேதிவினை ஏற்பட்டு உடல் கடுமையாக பாதித்துள்ளது.

நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு குறித்தும் யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை. அவரது மரணத்தை அவரே தேடிக் கொண்டார்” என பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒடிசா: தனக்காக சிறை சென்ற காதலனை காத்திருந்து திருமணம் செய்த பெண்.. பெற்றோர் கொடுத்த விநோத தண்டனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com