காசாவில் இணையதள சேவையை கொடுக்க முயலும் எலான் மஸ்க்.. தடுக்கும் இஸ்ரேல்

காஸா எல்லைப் பகுதியில் இணைய சேவைகளை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இஸ்ரேல் அரசு இறங்கி உள்ளது.
இணைய சேவை தடை
இணைய சேவை தடைமுகநூல்

காஸா எல்லைப் பகுதியில் இணைய சேவைகளை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இஸ்ரேல் அரசு இறங்கி உள்ளது.

இது குறித்து இஸ்ரேல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஷலோமா காரி வெளியிட்ட தகவலில், அவர் கூறியுள்ளதாவது,

இஸ்ரேல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஷலோமா காரி
இஸ்ரேல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஷலோமா காரி முகநூல்

” காஸா பகுதியில் இணைய சேவையை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ளதால், ஸ்டார் லிங்க் உடனான அனைத்து தொடர்புகளும் முறியடித்துக்கொள்ளப்படும்.  காசாவில் இணைய சேவைகள் வழங்கும் நடவடிக்கையை முடக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காஸா பகுதியில் 18 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான யாஹ்யா சின்வர் வெளியிட்ட அறிவிப்பில், ” இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க தாங்கள் தயாராக இருக்கிறோம்.அதற்கு பதிலாக இஸ்ரேலிய ராணுவம் பிடியில் உள்ள தங்கள் போராளிகளை விடுவிக்க வேண்டும் .” என்று தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்கள் முன்வைத்த நிபந்தனையை ஏற்க மறுத்துள்ள இஸ்ரேல், இந்த அறிவிப்பு மூலம் ஹமாஸ் படையினர் உளவியல் ரீதியான ராணுவ போரை தொடங்கி உள்ளதாக விமர்சித்துள்ளது.

இணைய சேவை தடை
"எங்கே குண்டு போடப்போகிறார்கள்? என்ன நடக்கிறது?" - சிகப்பாக மாறிய வானம்! ரத்தக்காடாக மாறுகிறதா காஸா?

தொடர்ந்து ஹமாஸ் படைகள் மீது தாக்குதல் நடக்கும் என்றும், அவர்களிடம் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ள இஸ்ரேலியர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com