\
Israel PM Spends ₹4.49 Crore on Hair Styling
பெஞ்சமின் நெதன்யாகுReuters

முடி அலங்காரத்திற்கு ரூ.4.49 கோடி.. அரசுப் பணத்தைச் செலவு செய்த பிரதமர்.. வெடித்த சர்ச்சை!

பொதுமக்களின் வரிப்பணம் பிரதமர்களின் ஒப்பனைக்காக அதிக அளவில் செலவிடப்பட்டிருப்பது அந்நாட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on

இஸ்ரேலில் பிரதமர்கள் வெறும் ஒப்பனைக்காக மட்டும் செய்த செலவு, கோடி ரூபாயைத் தாண்டியிருப்பது, அவ்வூர் மக்களை மட்டுமல்ல, உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் முடி அலங்காரம், ஒப்பனை மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்காகச் சுமார் 470,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.49 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கெனவே இஸ்ரேல் படைகள், காஸாவை நிர்மூலமாக்கிய நிலையில், தற்போது மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலில் பிரதமர்கள் ஒப்பனைக்காகச் செய்த செலவு குறித்த தரவுகள் வெளியாகி உள்ளன. அந்நாட்டின், தகவல் அறியும் உரிமை அமைப்பு (Movement for Freedom of Information) இதுதொடர்பாக அரசாங்கத்திடம் மனு அளித்திருந்தது. அவ்வமைப்பின் சார்பாக வழக்கறிஞர் யாரா வின்க்லர்-ஷாலிட் (Yaara Winkler-Shalit) கடந்த ஆண்டு டிசம்பரில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Benjamin Netanyahu
Benjamin NetanyahuReuters

அரசு வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் முடி அலங்காரம், ஒப்பனை மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதித்துவத்திற்காகச் சுமார் 470,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.49 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

Israel PM Spends ₹4.49 Crore on Hair Styling
ஹமாஸின் தாக்குதல் எச்சரிக்கை.. நெதன்யாகுவுக்கு வந்த தகவல்.. மறுத்த அரசு.. சர்ச்சையில் இஸ்ரேல்!

இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு (Sara Netanyahu) ஆகிய இருவருக்காக மட்டுமே 90% நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் (Naftali Bennett) மற்றும் யாயிர் லேபிட் (Yair Lapid) ஆட்சியில் இருந்த 2022-ஆம் ஆண்டில் மொத்த ஒப்பனைச் செலவு 27,600 டாலர் ஆக இருந்தது. ஆனால் 2023-இல் நெதன்யாகு மீண்டும் பதவிக்கு வந்ததும் இச்செலவு 103,000 டாலர் ஆக உயர்ந்து, 2025-இல் 111,000 டாலர் என்ற உச்சத்தை எட்டியது.

பெஞ்சமின் நெதன்யாகு
பெஞ்சமின் நெதன்யாகுReuters

2025 பிப்ரவரியில் நெதன்யாகு வாஷிங்டன் சென்ற 4 நாள் பயணத்தின்போது ஒப்பனைக்கு மட்டும் 13,500 டாலர் செலவிடப்பட்டது. 2024 ஜூலை வாஷிங்டன் பயணத்தில் 11,500 டாலர் செலவானது. 2023 அக்டோபரில் போர் உச்சத்திலிருந்த காலகட்டத்திலும்கூட பிரதமரின் முடி அலங்காரத்திற்காக மட்டும் அரசுப் பணத்திலிருந்து 810 டாலர் செலவழிக்கப்பட்டுள்ளதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது. இப்படி, பொதுமக்களின் வரிப்பணம் பிரதமர்களின் ஒப்பனைக்காக அதிக அளவில் செலவிடப்பட்டிருப்பது அந்நாட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Israel PM Spends ₹4.49 Crore on Hair Styling
நெதன்யாகு மகனுக்கு குறி.. பயத்தில் இஸ்ரேல் பிரதமர்..? ரகசிய திட்டம் தீட்டிய ஈரான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com