israel war
israel warfile image

மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட இஸ்ரேல்!

ஹமாஸுக்கு எதிரான போரில் பங்கேற்பதற்காக பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் மெய்க்காப்பாளர் இஸ்ரேலுக்கு திரும்பியதாக வெளியான தகவல் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே கடந்த 13 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரின்போது, ஹமாஸ் படையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் முன்வைத்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது இஸ்ரேலின் புதிய பொய் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் மெய்க்காப்பாளர் ஒருவர் ஹமாஸ் படையினருக்கு எதிரான போரில் பங்கேற்க அமெரிக்காவிலிருந்து இஸ்ரேல் திரும்பியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறிப்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வந்து சேர்ந்தமைக்கு நன்றி, இதுபோன்று இன்னொரு மனிதர் உங்களுக்கு கிடைக்காது என்று டெய்லர் ஸ்விஃப்ட்-க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் ஊடகம் ட்வீட் செய்திருந்தது.

இந்நிலையில், டெய்லர் ஸ்விஃப்ட்டின் மெய்க்காப்பாளராக இஸ்ரேல் பகிர்ந்த படத்தில் இருப்பவர், உண்மையில் இஸ்ரேலைச் சேர்ந்த ஊடகவியலாளர் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் தெரிந்த நெட்டிசன்கள், இஸ்ரேல் ஊடகங்களை கடுமையாக சாடி வருகின்றனர். ஹமாஸுக்கு எதிரான போரில் தொடர்ந்து இஸ்ரேல் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்த போரில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் 1,400 பேரும், காசாவைச் சேர்ந்தவர்கள் 3,000 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com