உச்சகட்டத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மேலும் 3 லட்ச வீரர்களை களமிறக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மேலும் 3 லட்சம் வீரர்களை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Israel
Israelpt web

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இரு பகுதிகளை சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது. இரு பிரிவுகள் இடையிலான மோதலால் காஸாவில் அப்பாவி மக்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காஸாவிற்கான உணவு, குடிநீர், மின்சாரம், பெட்ரோல் உள்ளிட்டவைகளை தடை செய்ய இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. போரை தொடங்கியது ஹமாஸாக இருந்தாலும் முடித்து வைக்கப்போவது இஸ்ரேலாகத்தான் இருக்கும் என்றும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.

மேலும், காஸாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்குள் தற்போது எந்த மோதலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. காஸாவில் உள்ள மக்கள் இயன்ற அளவு எகிப்து எல்லையை நோக்கி தப்பி செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

நான்காவது நாளாக நீடிக்கும் போர்

இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் படைக்குழு, ஒவ்வொரு ஏவுகணைக்கும் ஒரு பிணை கைதி கொல்லப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. ஹமாஸ் படையிடம் 150-க்கும் மேற்பட்ட பிணை கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து லெபனான் எல்லையிலும் போர் தொடங்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 7-ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதலைத் தொடர்ந்தனர். பதிலடியாக இஸ்ரேலும் காஸா மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உலக நாடுகள் இடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த மோதல் 4வது நாளாக நீடிக்கிறது.

Israel
தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. ஈரோட்டில் நிகழ்ந்த சோகம்

மேலும் 3 லட்சம் வீரர்கள்

இந்நிலையில் ஹமாஸுக்கு எதிரான போரில் மேலும் மூன்று லட்சம் பேரை களமிறக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே போரிட்டு வரும் வீரர்களோடு ராணுவ பயிற்சி பெற்ற மேலும் 3 லட்சம் பேரை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பாலஸ்தீன போராளிக்குழுக்களையும் மொத்தமாக ஒழிக்கும் முனைப்பில் இஸ்ரேல் ராணுவம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தரை கப்பல் வான் என மூன்று படைகளையும் சேர்த்து 3 லட்சம் படைவீரர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பு மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தும்படி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை எதிர்க்கும் அளவிற்கு பாலஸ்தீனத்திற்கு படைபலம் இருக்கிறதா என்ற கேள்வி எழும். பாலஸ்தீன போராளிக்குழுக்களுக்கு ஜோர்டன், லெபனான், எகிப்து மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈரானின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரியும் முக்கியத் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலின் மீது தாக்குதல் நடந்ததற்கும் ஈரானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் கைகளில் முத்தம் கொடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு இஸ்லாமிய நாடுகள் ஆயுத உதவிகளை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை உச்சகட்டத்தில் உள்ளது என்பது மட்டும் உறுதி.. மேலும் மூன்று லட்சம் வீரர்களை களமிறக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையின் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com