தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்.. ஈரோட்டில் நிகழ்ந்த சோகம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சின்னியம்பாளையத்தில் மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து தாய் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூரணி
பூரணி PT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சின்னியம்பாளையத்தை சேர்ந்த தம்பதி பூரணி, மற்றும் மதன்குமார்.

பூரணி தன் வீட்டில் மூன்று மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது தீடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பூரணி
பூரணி PT

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூரணியின் கணவர் மதன்குமார் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். மயங்கி விழுந்த பூரணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து பூரணியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கோபி
கோபி PT

மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து தாய் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com