
தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் ஆளுகையின் கீழ் உள்ள காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் கடற்கரையோரம் இரு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டன. புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், காசா பகுதியில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
2006 ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆளுகையின் கீழ் காசா வந்தது முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற சண்டையின் போது, காசா பகுதியில் இருந்த 253 பேர் கொல்லப்பட்டனர். எகிப்து உள்ளிட்ட நாடுகளின் சமரசத்தை தொடர்ந்து போர் நிறுத்தப்பட்டது.