\
Trump & Zelensky
Trump & ZelenskyWeb

டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு? ரஷ்யாவுக்கு புதிய அதிர்ச்சி? உக்ரைன் போரில் புதிய அத்தியாயம்?

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சில உதிரிபாகங்களை உக்ரைனிலேயே தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் தொடங்கலாம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Published on
Summary

வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்த பின்னர், ஃபாக்ஸ் நியூஸுக்கு பேட்டியளித்த ஜெலென்ஸ்கி, உக்ரைனில் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்புகளை உற்பத்தி செய்ய அமெரிக்கா, லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முன்னேறி வருவதாக தெரிவித்தார். அங்காரா நேட்டோ மாநாட்டிலிருந்து தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, ரஷ்யாவின் தொடர்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - ஐடா அருட்செல்வி

வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்த பிறகு, ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டார். துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டின்போதே இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும், தற்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Trump & Zelensky
Trump & ZelenskyWeb

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் முக்கியமானது என ஜெலென்ஸ்கி கூறினார். அதிக எண்ணிக்கையிலும், விரைவாகவும் பாதுகாப்பு அமைப்புகள் தேவைப்படுவதால், பேட்ரியாட் உற்பத்தி உரிமம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Trump & Zelensky
அடித்து நொறுக்கப்படும் டிரம்பின் கணக்கு! போரில் களமிறங்கும் சீனா? ஈரானுக்கு குவியும் ஏவுகணைகள்?

மேலும், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன நிர்வாகிகளுடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். பேட்ரியாட் தொடர்பான அமைப்புகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை இணைந்து தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Trump & Zelensky
Trump & ZelenskyWeb

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பேட்ரியாட் அமைப்புகள் மிகவும் முக்கியமானதாக உள்ளன. ஆனால், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால், உக்ரைன் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

Trump & Zelensky
பல ஆண்டுகால மர்மம் தீர்ந்தது.. சூரியனைப் பற்றிய கணக்கு தவறா? விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com