மொஜ்தபா காமேனி
மொஜ்தபா காமேனிPt web

”ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி படுகாயம் அடைந்திருக்கலாம்” - அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர்.!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி "படுகாயமடைந்திருக்கலாம் " என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
Published on

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2 வாரங்களை கடந்து நடந்து வரும் நிலையில், ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்காவின் போர் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில், ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அமெரிக்கத் தரப்பில் இருந்து இது எதிர்பாரதவிதாமக நடந்த விபத்தே எனக் கூறும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து, அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ஆதரவு குழுவின் தாக்குதலே எனக் கூறுகிறது. இந்த சூழலில் தான், இந்த விபத்து குறித்து விளக்கம் அளிப்பதற்கான அமெரிக்க பாதுக்காப்புச் செயலாளர் ஹெக்ஸெத் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இந்த விபத்து குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, ஈரானின் புதிய உச்சத் தலைவராக பதவியேற்றிருக்கும் மொஜ்தபா காமேனி குறித்து பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

Pete Hegseth
Pete Hegseth Web

அதில், புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனியின் முதல் உரையில் அவரது குரல் அல்லது காணொளி ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பினார். அவர் ஒரு அறிக்கையை மட்டுமே வெளியிட்டிருக்கிறார். அது உண்மையில் பலவீனமான ஒன்றாக தெரிகிறது. ஈரானிடம் ஏராளமான கேமராக்கள் மற்றும் ஏராளமான குரல் பதிவு இயந்திரங்கள் உள்ளன. ஏன் எழுதப்பட்ட அறிக்கை? ஏன் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவரது தந்தை இறந்துவிட்டார். மொஜ்தபா காமேனி படுகாயமடைந்திருக்கக் கூடும். எனவே, அவர் பயந்து பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் இராணுவத் திறன்கள் பலவீனமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் 15,000 எதிரி இலக்குகளைத் தாக்கியுள்ளது. மேலும், அவர்களுடைய ஏவுகணைகளின் அளவு 90% குறைந்துள்ளது என்றும் அவர்களின் ஒருவழி தாக்குதல் ட்ரோன்கள் 95% குறைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

மொஜ்தபா காமேனி
ஈரான் போர் எதிரொலி | 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com