ஈராக்முகநூல்
உலகம்
ஈராக்|40 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு!
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: புதிய புள்ளிவிவரங்கள் வெளியீடு
ஈராக்கில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அந்நாட்டின் மக்கள் தொகை 4.6 கோடியாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்ததால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஈராக்கின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெடரல் ஈராக் மற்றும் ஈராக்கின் அங்கமாக அதேசமயம் பாதி சுயாட்சியுடன் செயல்படும் குர்து பிராந்தியத்தின் மக்களின் வாழ்க்கைச் சூழல் குறித்தும் புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெடரல் ஈராக்கை விடவும் குர்து பிராந்தியத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.