ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு! இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இப்ராகிம் ரைசி
இப்ராகிம் ரைசிட்விட்டர்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஹமாஸ் மற்றும் காசாவுக்காக துணை நிற்கிறது ஈரான். ரஷ்ய-உக்ரைன் போரிலும் ஈரானின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. கடந்த மாதம்தான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தச்சூழலில் ஈரான் அதிபர் Ebrahim Raisi சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

ஈரான் - அஜர்பைஜான் எல்லையில் அணை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது டிஸ்மர் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில், இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் பயணித்த நிலையில், விபத்து நடைபெற்ற 17 மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரைசி அதிபராக இருந்தபோதுதான் செறிவூட்டப்பட்ட யூரேனியம், ஆயுதம் என்ற அளவில் உருவாக்கப்பட்டது. ஹமாசுக்கும், ரஷ்யாவுக்கும் வெடிகுண்டுகளை ஏந்திச்செல்லும் ட்ரோன்களை ஈரான் வழங்குவதால் மேற்கு பகுதியில் பதற்றம் அதிகரிக்க காரணமாக இருந்தது.

இப்ராகிம் ரைசி
ஈரான் அதிபர் மரணம்: விபத்தா.. சதியா? மொசாட்டிற்கு தொடர்பு? பின்னணியில் பகீர் கிளப்பும் புதியதகவல்கள்

அதேநேரம். பொருளாதாரம், பெண்கள் உரிமை என பல விஷயங்களில் இதுவரை இல்லாத அளவுக்கான பிரம்மாண்ட போராட்டங்களை ஈரான் எதிர்கொண்டது. திங்கட்கிழமை காலையில், துருக்கி வெளியிட்ட ட்ரோன் காட்சிகளில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. அஜர்பைஜான்- ஈரான் எல்லையில் மலைச்சரிவில் ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டறியப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. ரைசி மறைவு உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐந்து நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின், Azerbaijan அதிபர் Ilham Aliyev துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan , இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் ஈரான் அதிபர் ரைசி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com