\
Iran's Hormuz Offer to India: 4 Major Risks
ஹார்முஸ்Reuters

ஹார்முஸ் பதற்றம்.. இந்தியாவுக்கு ஈரான் சிறப்பு அனுமதி.. பின்னணியில் இருக்கும் 4 ஆபத்துகள்?

. ஆனால், போர் சூழலில் தவறுதலாக தாக்குதல், பொருளாதார தடைகள், காப்பீட்டுக் கட்டண உயர்வு மற்றும் அரசியல் முடிவுகளின் தாக்கம் போன்ற 4 முக்கிய ஆபத்துகள் உள்ளன என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Published on: 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்க இந்தியக் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு ஓரளவு நிம்மதியை அளித்தாலும், இந்த அனுமதிக்குப் பின்னால், 4 முக்கியமான ஆபத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்துப் பார்க்கலாம்.

உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக ஹார்முஸ் நீரிணை திகழ்கிறது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா இடையிலான மோதலால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்திருப்பதுடன், உலகநாடுகள் விலைவாசி உயர்வால் அவதிக்குள்ளாகியிருக்கின்றன.

Reuters

இந்தச்சூழலில் தான், இந்தியா, சீனா, கத்தார் மற்றும் ஈராக் ஆகிய 4 நாடுகளின் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் (Amir Hayat Moghadam) தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்தியாவிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், சீனாவின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக அந்நாட்டுக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Iran's Hormuz Offer to India: 4 Major Risks
வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்.. தூதகரங்களை முடக்கிய அமெரிக்கா!

ஈரானின் இந்த அறிவிப்பு, இந்தியாவுக்கு எரிபொருள் கிடைப்பதில் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்பட்டாலும், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதாவது போர் இன்னும் முடிவடையாத சூழலில், ஹார்முஸ் பகுதியில் இந்தியக் கப்பல்களின் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தக்கூடும் எனவும் ஈரானுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Reuters

மேலும், இந்தப் போர்ச்சூழலில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு காப்பீட்டுக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, போர் அபாயக் காப்பீட்டுக்கான பிரீமியம் உயர்ந்தால், கப்பல் போக்குவரத்துச் செலவும் அதிகரிக்கும். இதனால் ஈரான் வழங்கும் அனுமதியால் கிடைக்கும் லாபம், கூடுதல் செலவுகளால் குறையக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப இந்த அனுமதியை மாற்றியமைக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல் போக்குவரத்து ஈரானின் அரசியல் முடிவுகளைச் சார்ந்திருக்கும் சூழல் உருவாகலாம் எனவும் கூறுகின்றனர்.

இவ்வாறு, ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் வழங்கும் அனுமதி, உடனடியாகப் பார்க்கும்போது இந்தியாவுக்கு நிம்மதியளிக்கும் நடவடிக்கையாக இருந்தாலும், பல்வேறு சவால்களையும் உள்ளடக்கியதாகவே பார்க்கப்படுகிறது.

Iran's Hormuz Offer to India: 4 Major Risks
ட்ரம்பை கொல்ல வந்த நபர் கைது.. பின்னணியில் வெனிசுலா அதிபர்?