\
Trump Reignites Trade Tensions: Will India Face Higher Import Tariffs?
TRUMPANI

ஐரோப்பாவை குறிவைக்கும் ஈரான் ஏவுகணைகள்?? உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதல் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார்.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதல் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நாடுகளில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடம் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு 4,500 கிலோமீட்டர் வரை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தொலைவு ஐரோப்பாவின் பல பகுதிகளை எட்டக்கூடியது என்பதால், ஈரானின் அடுத்த இலக்கு ஐரோப்பாவாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Iran's new missile city what makes it special
Missile Reuters

இதற்கிடையே, நவம்பர் 26- ஆம் தேதி குவைத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என குவைத் மற்றும் இத்தாலி குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதே நாளில், ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ விமானத் தளமான முவாஃபக் சால்டி (அல்-அஸ்ராக்) தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள் மத்திய கிழக்கில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.

iran missile
iran missile Reuters

இந்தச் சூழலில்தான், ஈரானின் ராணுவ பலம் குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் ஏவுகணைகள் தற்போதைய நிலையில் அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் அளவுக்கு நீண்ட தூரம் செல்லக்கூடியவை அல்ல என்றாலும், ஐரோப்பிய நாடுகளை எட்டும் திறன் அவற்றுக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், அமெரிக்காவைவிட ஐரோப்பிய நாடுகளுக்கே ஈரானிடம் இருந்து அதிக அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்தும் ட்ரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்குமே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, அணு ஆயுதங்கள் ஈரான் தலைவர்களின் கைகளுக்குச் சென்றால், அவை இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்றும், அதன் விளைவுகள் உலகையே பேரழிவுக்குள் தள்ளக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

ஈரான் போன்ற ஆபத்தான நாடுகளின் கைகளில் அணு ஆயுதங்கள் கிடைப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Trump Reignites Trade Tensions: Will India Face Higher Import Tariffs?
அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?