நிதி ஜிகாத் |அமெரிக்க வீரர்கள் தலைக்கு 30,000 டாலர்.. விலை நிர்ணயித்த ஈரான்.. அரண்டு போன டிரம்ப்!
கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது. இதன் காரணமாக தற்போது போர் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த சூழலில் ஈரானுக்குள் நுழைந்து அந்நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டு வீரர்களின் தலைக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்துள்ளது.
இது குறித்து நிதி ஜிகாத் என்ற பெயரில் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களிடம் இருந்து பெருமளவில் கோரிக்கைகள் வந்ததால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் வீரர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்பவர்களுக்கு அல்லது சிறைபிடிப்பவர்களுக்கு 5 பில்லியன் டோமன்களுக்கு இணையான தொகை, அதாவது 30 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்றும், இந்தச் செயலைத் துணிச்சலாகச் செய்து முடிக்கும் ஈரானியப் பெண்களுக்கு 60 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க வீரர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அரசிடம் வழங்கினால், அதன் உண்மையான விலையை விட 2 மடங்கு அதிக விலை கொடுக்கப்படும் என்றும், பழைய ஆயுதத்துக்கு பதில் புதிய ஆயுதம் அவர்களுக்குத் தரப்பட்டு, பழைய ஆயுதம் அருங்காட்சியகத்தில் (Museum) வைத்து பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் இந்த வெளியிட்டுள்ள இந்த பகிரங்க அறிவிப்பு காரணமாக ஈரானுக்குள் தரையிறங்கும் திட்டம் பற்றி டிரம்ப் ராணுவத்துடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

