\
Ukraine has launched the largest attack on Moscow since World War II
largest attack on Moscow Reuters

பற்றி எரியும் ரஷ்ய தலைநகர்.. 2-ம் உலகப்போருக்கு பின்னர்., உக்ரைன் செய்தது என்ன ?

ரஷ்ய தலைவர் மாஸ்கோ மீது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டுள்ளது.
Published on

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஆட்சிக்கு வந்த ஜெலன்ஸ்கி உக்ரைனை நேட்டோவில் இணைக்க முயன்றார். ஆனால் இதனை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக பார்த்த ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது படையெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக வந்த நேட்டோவில் உறுப்பினராக உள்ள அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட போர் ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்து வருகிறது.

Moscow
Moscow Reuters

இந்த போரில் முதல்முறையாக ட்ரோன்களை பெரிய அளவில் உக்ரைன் அறிமுகப்படுத்தி ஒரு புதிய போர் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி மதிப்பு கொண்ட ரஷ்யாவின் அதிநவீன ஆயுதங்களை சில ஆயிரம் மதிப்பு கொண்ட ட்ரோன்களை பயன்படுத்தி உக்ரைன் அழித்து வருகிறது.

இந்த ட்ரோன்களை பயன்படுத்தி நுழையவே முடியாது என கூறப்பட்ட ரஷ்யா தலைநகரான மாஸ்கோவுக்குள்லேயே நுழைந்து பல முறை உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது 100க்கும் அதிகமான ட்ரோன்களை கொண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முன்னெப்போதும் இல்லாத அளவு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் ஒரே நேரத்தில் அனுப்பிய பல நூறு ட்ரோன்களில் சில ட்ரோன்கள் ரஷ்யாவின் வான் தடுப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டாலும், மீதம் உள்ள ட்ரோன்கள் வெற்றிகரமாக ரஷ்யாவின் தலைநகரில் நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் இந்த தாக்குதலில் மாஸ்கோவின் பல பகுதிகள் பற்றி எரிவதாகவும், குறைந்தபட்சம் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சந்தித்துள்ள மிகப்பெரிய வான்வெளி தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Ukraine has launched the largest attack on Moscow since World War II
விமான நிலையத்தில் பயங்கரம்! துப்பாக்கியால் சுட்ட பயணி... அலறிய பயணிகள் - இருவர் காயம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com