\
Bahrain allegation vs iran attacks
Mojtaba Khamenei Reuters

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்.. வாக்காளர்களுக்குக் குறி.. ட்ரம்புக்கு எதிராகக் களமிறங்கிய ஈரான்!

ட்ரம்பின் கொள்கைகளை நிராகரிக்க அமெரிக்க வாக்காளர்களுக்கு 25 பக்க திறந்த கடிதம் மூலம் நேரடி அழைப்பு விடுக்கும் ஈரானின் IRGC
Published on: 

செய்தியாளர்: எம். மீரா

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்க வாக்காளர்களை நேரடியாகக் குறிவைத்து ஈரானின் IRGC, 25 பக்க திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ட்ரம்பின் கொள்கைகளை நிராகரித்து, ஈரானுடன் அமைதியான சகவாழ்வை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவையும், வெளிநாடுகளில் நடத்தப்படும் போர்களையும் அமெரிக்க வாக்காளர்கள் எதிர்க்க வேண்டும் என்று IRGC வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகள் மாறினால், ஈரானும் அமெரிக்காவும் இணைந்து வாழ முடியும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRGC
IRGCReuters

ஈரானின் அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது என்ற தங்கள் நிலைப்பாட்டை ட்ரம்ப் மறைத்து வருவதாகவும் IRGC குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பாரசீக வளைகுடாவில் உள்ள முக்கியமான ஹார்முஸ் நீரிணை மீதான ஈரானின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அமெரிக்கா கூறுவதை IRGC செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி மறுத்துள்ளார்.

அமெரிக்க மக்கள் பல முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து போதுமான தகவல்களை அறிந்திருக்கவில்லை என்றும், அவர்கள் உண்மையை அறிந்தால், தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மொஹெப்பி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானை நம்ப முடியாது என்றும், அணு ஆயுதம் உருவாக்குவதைத் தடுக்கவே ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த வாரம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திலும் ஈரானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

donald trump
donald trumpreuters

ஹார்முஸ் நீரிணை விவகாரத்திலும் இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. Kpler தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் அந்த நீரிணை வழியாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்து, நாளொன்றுக்கு சுமார் 1 கோடி பீப்பாய்களை எட்டும் நிலையில் உள்ளது. இது போருக்கு முந்தைய அளவில் சுமார் பாதியாகும்.

Bahrain allegation vs iran attacks
முடிவுக்கு வந்த அமெரிக்காவின் 20 ஆண்டுகால ஆட்டம்.. வெற்றியில் திளைக்கும் ஈரான்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com