\
US midterm elections i feel foolish says Elon Musk in regret
Elon MuskReuters

ஸ்டார்லிங்கை ஆயுதமாக்கிய ஈரான்.. கடும் கோபத்தில் எலான் மஸ்க்!

ஸ்டார்லிங்கை ராணுவ ஆயுதமாக மாற்றிய ஈரான்: சர்வதேச அளவில் பரபரப்பு!
Published on: 
Summary

ஸ்டார்லிங்க் சேவையை ராணுவ நடவடிக்கைகளில் ஈரான் பயன்படுத்திய விவகாரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில், ட்ரோன் கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக இந்த சேவை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரான் பயன்படுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டார்லிங்க் ஈரானில் அதிகாரப்பூர்வமாகச் செயல்பட அனுமதி இல்லை. இருப்பினும், அங்கு இணையத் தடைகளைத் தாண்டுவதற்கு பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

The Hidden Dangers of Satellites and Space Junk in Orbit
Space XUniversity of Warwick

இந்நிலையில், பொதுமக்களுக்கும் பயன்படும் செயற்கைக்கோள் இணையச் சேவை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஸ்டார்லிங்க் சேவையை அனுமதியின்றி இரண்டு முறை பயன்படுத்தியிருப்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கவனத்திற்கு வந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ராணுவக் கட்டுப்பாட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் ஸ்டார்லிங்க் பயன்படுத்தப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான ரகசிய அறிக்கை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க ராணுவமும் ஸ்பேஸ்எக்ஸின் ராணுவப் பயன்பாட்டுக்கான ஸ்டார்ஷீல்டு சேவையைப் பயன்படுத்தி ட்ரோன் நடவடிக்கைகளை மேற்கொண்டது மஸ்க்கிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இரண்டு முக்கிய அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

Starlink India Row: Musk vs Gov
Starlink India Row: Musk vs GovAI

இந்தச் சூழலில், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமையகங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்துவது போன்ற ஏஐ வீடியோ ஒன்றையும் ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

US midterm elections i feel foolish says Elon Musk in regret
குழந்தைகளைக் கொன்றவர்களை விடமாட்டோம்! அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை!