\
Iran threatens US companies over the killing of children
Minab school Chilldren funeralreuters

குழந்தைகளைக் கொன்றவர்களை விடமாட்டோம்! அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை!

மன்னிப்பு கேட்குமா அமெரிக்கா? அல்லது அழிவைச் சந்திக்குமா? ஈரானின் கடும் எச்சரிக்கை!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈரான் குறிவைத்துள்ளது. அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமையகங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்துவது போன்ற ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம், கடந்த வியாழக்கிழமை தனது டெலிகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், அமெரிக்காவின் மூன்று தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகங்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கட்டடங்கள் வெடித்துச் சிதறுவதும், தீப்பற்றி எரிவதும் போல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

iran war
iran war reuters

இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசும் குரல், "எங்கள் குழந்தைகளைக் கொன்றவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்" என்று எச்சரிக்கிறது. அதேநேரத்தில், அமெரிக்க மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்த மாட்டோம் என்றும், ஆனால் குறிவைக்கப்பட்ட நிறுவனங்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. மேலும், "மன்னிப்பு கேட்கிறீர்களா அல்லது அழிவைச் சந்திக்கிறீர்களா? முடிவு உங்கள் கையில், அமெரிக்கா" என்ற எச்சரிக்கையுடன் வீடியோ முடிகிறது.

அமேசான், மைக்ரோசாப்ட், ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவப் பிரிவுகளுடன் ரகசியமாக இணைந்து செயல்படுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்த நிறுவனங்கள் தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

iran war
iran war reuters

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் முதல் நாளே ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜரே தய்யேபே பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் ஈரான் இந்த வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்திருந்தனர்.

இதற்கிடையே, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஜனவரி 2027 இறுதி வரை நிதி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜனவரியில் போர் முடிவடையும் என்றும் அவர் அறிவிக்கவில்லை.

இதுவரை ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதங்களைக் குறிவைத்து வந்த ஈரான், தற்போது அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் விரிவடையும் அபாயத்தை உணர்த்துகிறது

Iran threatens US companies over the killing of children
US air force முதல் FBI வரை... அடுத்தடுத்து சைபர் தாக்குதல்! நிலைக்குலைந்து நிற்கும் அமெரிக்கா