ஈரான் - இந்திய மக்கள்
ஈரான் - இந்திய மக்கள்web

’உங்க உதவியை மறக்க மாட்டோம் INDIA..’ உருக்கமாக நன்றி சொன்ன IRAN.. என்ன நடந்தது..?

ஈரானை நெகிழ வைத்த இந்திய காஷ்மீர் மக்களின் அன்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on
Summary

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் மோதலில் இந்தியா ஈரானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் இந்த உதவியை பாராட்டிய ஈரான் தூதரகம், 'இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மக்களும் தங்களின் நிவாரணங்களை ஈரான் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தொடங்கி சுமார் 20 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், கள நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு இந்தியா செய்து வரும் தொடர் மனிதாபிமான உதவிகள், தற்போது சர்வதேச அளவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்த மோதலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தீவிரத் தாக்குதல்களால் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ஈரான் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் 15 பேரும், West Bank மற்றும் வளைகுடா நாடுகளில் 20-க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் போர்
அமெரிக்கா - ஈரான் போர்web

ஈரானின் அண்டிமேஷ்க் (Andimeshk) பகுதியில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அவசர அவசரமாக வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் ஈரானின் மின்சாரக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலையும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது.

ஈரான் - இந்திய மக்கள்
இயக்குவது யார்? மொஜ்தபா எங்கு இருக்கிறார்? தீவிரமாய்த் தேடும் அமெரிக்கா.. விலகாத ஈரான் மர்மம்!

இத்தகைய இக்கட்டான நிலையில் , "வசுதைவ குடும்பகம்" (Vasudhaiva Kutumbakam) அதாவது "உலகமே ஒரு குடும்பம்" என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையில், இந்தியா கடந்த மார்ச் 18 முதல் ஈரானுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கையைப் பாராட்டியுள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், "இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

அரசு ரீதியான உதவிகள் மட்டுமன்றி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் (Budgam) மாவட்ட மக்களின் பங்களிப்பு இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஈத் பண்டிகை முடிந்த கையோடு, ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளில் இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஈரான் மக்களுக்காகத் தங்கம், வெள்ளி, செம்பு பாத்திரங்கள் மற்றும் பணத்தை நிவாரணமாகச் சேகரித்து வருகின்றனர். மஸ்ஜித் இமாம் ஜமான் (Masjid Imam Zaman) பகுதியில் இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தில் மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற பொருட்களைத் தானமாக வழங்கி வருகின்றனர்.

இதில் மிகவும் நெகிழ்ச்சியான விஷயமாக, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முதிய சகோதரி, 28 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது கணவரின் நினைவாகப் போற்றிப் பாதுகாத்து வந்த தங்க நகையை ஈரான் மக்களின் துயர் துடைக்கத் தானமாக வழங்கியுள்ளார். அதேபோல், சிறுவர்கள் தங்களின் உண்டியல் சேமிப்பைப் பகிர்ந்துள்ளனர். சில ஏழைக் குடும்பங்கள் தங்களின் கால்நடைகளையும் நிவாரணத்திற்காக வழங்கியுள்ளனர்.

இந்தத் தகவலைப் புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஈரான் தூதரகம், இந்திய மக்களின் இந்தத் தூய்மையான அன்பு தங்களுக்குப் மிகப்பெரிய ஆறுதலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இவர்களுடன் இணைந்து பட்காம் தொகுதி எம்.எல்.ஏ முன்தாசிர் மெஹ்தி (MLA Muntazir Mehdi), தனது ஒரு மாத கால ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். "எதைக் காட்டிலும் மனிதநேயமே முதன்மையானது" எனத் தெரிவித்துள்ள ஈரான் தூதரகம், இந்தியாவுக்கும் குறிப்பாகக் காஷ்மீர் மக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

ஈரான் - இந்திய மக்கள்
’இது ஒண்ணு போதும்..’ - ஈரான் வசமுள்ள கடைசி துருப்புச்சீட்டு.. அச்சத்தில் US, Israel!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com