\
Iran Tensions: US Faces Major Setback! Warships Pull Out!
US war shipReuters

ஈரான் பதற்றம்.. பெரும் பின்னடைவில் அமெரிக்கா.. வெளியேறிய போர்க்கப்பல்கள்!!

மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படை மாற்றம்: ஹார்முஸ் நீரிணை சிக்கல் தீவிரம்!
Published on: 

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் 7 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்றபோது, கத்தார் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் சமாதான பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவை வழங்கியது. ஆனால், இந்த முன்மொழிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கவில்லை என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரானின் 7 நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைகளில் தற்போது முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

US warship
US warshipreuters

USS George H.W.Bush என்ற அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலும், USS Delbert D. Black என்ற ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலும் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறி, தாய்லாந்தின் பூகெட் (Phuket) துறைமுகத்தை சென்றடைந்துள்ளன.

USS George H.W. Bush கடந்த ஏப்ரல் மாதம் முதல் மத்திய கிழக்கில் இருந்தது. Delbert D. Black போர்க்கப்பல் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.

USS George H.W. Bush, ஏப்ரல் மாத இறுதியில் அரேபிய கடல் பகுதிக்கு வந்தது. அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏமன் பகுதியில் இருந்து தாக்கப்படும் அபாயம் இருந்ததால், செங்கடல் வழியாக செல்லாமல் ஆப்பிரிக்காவை சுற்றி, Cape of Good Hope வழியாக வந்தடைந்தது.

US warship
US warship Reuters

தற்போது இந்த இரண்டு போர்க்கப்பல்களும் தாய்லாந்தில் உள்ள நிலையில், மத்திய கிழக்கில் USS George Washington மட்டுமே அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலாக உள்ளது.

மொத்தமாக சுமார் 17 அமெரிக்க கடற்படை கப்பல்கள் தற்போது மத்திய கிழக்கு பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை அரேபிய கடல் பகுதியில் உள்ளன. மேலும் 3 ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல்கள் செங்கடலில் செயல்பட்டு வருகின்றன.

தற்போது George H.W. Bush அக்டோபர் 9-ம் தேதி வரை தாய்லாந்தில் இருக்கும் என கூறப்படுகிறது. அதன் அடுத்தகட்ட பயணம் குறித்து தெளிவான தகவல் இல்லை.

இது குறித்து பேசியிருக்கும் ஈரான் அமெரிக்க கடற்படை கப்பல்கள் ஈரான் எல்லையில் இருந்து 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பின்னால் சென்றுவிட்டதாக கூறியுள்ளது.

மேலும், அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

Abbas Araqchi
Abbas AraqchiReuters

ஈரானின் புரட்சிகர காவல் படையான IRGC-யின் ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் ஈரான் அரசு தொலைக்காட்சியில்பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை, Gulf of Oman மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். ஈரான் மற்றும் IRGC மேற்கொண்ட கடற்படை மற்றும் வான்வழி தாக்குதல்களால் அமெரிக்க படைகள் பின்வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்தார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மீண்டும் ஹார்முஸ் அருகே வந்தால் அவை தாக்குதலுக்கு உள்ளாகும், அபாயம் இருப்பதாகவும் ஈரான் எச்சரித்துள்ளது.

Iran Tensions: US Faces Major Setback! Warships Pull Out!
விமான நிலையங்கள் முதல் Aramco வரை.. சவுதியை அதிரவைத்த ஹவுதிகளின் ஏவுகணை மழை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com