\
Iran strikes U.S. air base in Kuwait, targets Bahrain amid attacks
iranreuters

இனி கைவெச்சா காலி.. ஈரான் எடுத்த திடீர் முடிவு! உச்சகட்ட அதிர்ச்சியில் அமெரிக்கா!

ஈரானின் புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கெஷ்ம் தீவில் IRGC-யின் ஏவுகணை ஏவுதளம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தளத்தின் மீது, அமெரிக்க போர் விமானங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடும் தாக்குதலை நடத்தியிருந்தன. இந்த தாக்குதலால், கெஷ்ம் தீவின் வடமேற்கு பகுதிகளில், 5-ல் இருந்து 6 முறை மிகப்பெரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது. ஹார்முஸ் அருகே அமைந்துள்ள இந்த தீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அதிரடி நடவடிக்கையில் ஈரான் இறங்கியுள்ளது.

donald trump
donald trumpreuters

அதாவது, குவைத் நாட்டின் அலி அல் சலீம் பகுதியில் உள்ள விமானப் படைத் தளம் உள்ளது. இதேபோல், பஹ்ரைன் நாட்டில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு முக்கியமான ராணுவ தளங்களின் மீதும், ரேடார் மையங்கள் மீதும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால், இந்த தாக்குதல்களை தாங்கள் முறியடித்துவிட்டோம் என்று, சவுதி, குவைத் ஆகிய இரு நாடுகளும் கூறியுள்ளன. இதற்கிடையே, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளும், GCC எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும், ஈரானின் தாக்குதல், வளைகுடாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த கண்டனங்களைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிரிகள் மீண்டும் தாக்குதல்களை தொடர்ந்தால், புவியியல் எல்லைகளை தாண்டியும் தாக்குதல் நடத்துவோம் என்று, ஈரான் புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி அமிர் அட்டாமி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை, அன்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை மட்டுமே குறி வைத்து, ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்காவில் நேரடியான தாக்குதல்கள் எதையும் ஈரான் நடத்தவில்லை.

தற்போது புவியியல் எல்லைகளை தாண்டி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் கூறியிருப்பதால், அமெரிக்காவில் நேரடி தாக்குதலை ஈரான் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் Dirty Bomb தாக்குதலை நடத்த ஈரான் முயற்சிப்பதாக, சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்க விடுத்திருந்தது என்பதும், இது நடந்தால் மிகப்பெரிய அழிவு அந்நாட்டில் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Iran strikes U.S. air base in Kuwait, targets Bahrain amid attacks
தங்கம் வென்ற வீரருக்கு நேர்ந்த சோகம்.. ஒலிம்பிக் கனவில் விழுந்த பேரிடி.. கோர விபத்தில் பறிபோன கை!!