ஹிஜாப் அணிய மறுத்த பெண்கள்.. துருக்கியின் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான்!

ஹிஜாப் அணிய மறுத்து பெண்கள் பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது.
model image
model imagex page

உலகளவில் கடந்த சில ஆண்டுகளாக, ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஓர் அரசுக் கல்லூரியில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வர அந்தக் கல்லூரி முதல்வர் தடை விதித்தார். அந்தத் தடையை மீறி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. இந்த தடை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹிஜாப் அணிய மறுத்து பெண்கள் பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது.

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”எனது கிரிக்கெட் மனைவி..” - ராகுல் டிராவிட் குறித்து உருக்கமான பதிவிட்ட ரோகித் சர்மா!

model image
ஹிஜாப் அணிய தடை.. மீறினால் அபராதம்.. தஜிகிஸ்தான் அரசு அதிரடி!

கடந்த ஆண்டு அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால், அந்த போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும், ஹிஜாப் சட்டங்களையும் கடுமையாக்கியது.

model image
ஹிஜாப் சர்ச்சையில் சிக்கியிருந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை!
Hijab
Hijabpt desk

இந்த நிலையில், துருக்கி விமான நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்து பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்ற ஈரான் போலீசார், அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதையும் படிக்க: IPL Coach| வெளியேறும் கவுதம் கம்பீர்.. உள்நுழையும் ராகுல் டிராவிட்.. தீவிரம் காட்டும் கொல்கத்தா அணி!

model image
ஹிஜாப் அணிய தடை: இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com