\
ஹிஜாப் அணிய தடை: இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

ஹிஜாப் அணிய தடை: இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

ஹிஜாப் அணிய தடை: இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
Published on

கல்லூரி விதிமுறையில் மாணவிகள் வளாகத்தில் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தும் கல்லூரி நிர்வாகம் தடை விதிப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டினர்.

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.  பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். அவர்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்களும் போராடுவோம் என்று கூறி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து போராடி வருகிறார்கள்.

கல்லூரி விதிமுறையில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தும் கல்லூரி நிர்வாகம் தடை விதிப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி முதல்வரான நாராயண் ஷெட்டி கூறுகையில், தான் ஒரு அரசு ஊழியர் எனவும், அரசின் விதிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், மதத்தின் பேரில் அமைதி சீர்குலைந்தால் முதல்வர்தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”திடீரென ஏன் பர்தாவுக்கு தடை?”- போராட்டத்தில் இறங்கிய உடுப்பி இஸ்லாமிய கல்லூரி மாணவிகள்!



logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com