\
RAF
RAFreuters

’பிரிட்டன் ராணுவம் ஒரு பயங்கரவாத அமைப்பு..’ ஈரான் அறிவிப்பால் அதிர்ச்சி!

பிரிட்டன் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஈரான்: சர்வதேச அளவில் பரபரப்பு!
Published on: 
Summary

பிரிட்டனின் ராயல் கடற்படை மற்றும் விமானப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஈரான், சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நீடிக்கும் பதற்றத்தின் பின்னணியில், பிரிட்டனின் நடவடிக்கைகள் ஈரானுக்கு எதிரானவை என குற்றம்சாட்டி, பதிலடி நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா, இஸ்ரேலுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரிட்டனுக்கு எதிராக ஈரான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பிரிட்டனின் ராயல் கடற்படை (Royal Navy) மற்றும் ராயல் விமானப்படையை (Royal Air Force) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது ஈரான். மேலும் பிரிட்டனின் உளவு அமைப்பான M16ஐ விரோத அமைப்பாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RAF
RAF reuters

ஈரானின் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஏற்கெனவே ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC-யை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே பிரிட்டனின் ராணுவப் படைகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பிரிட்டன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஈரானுக்கு எதிரான விரோதப் போக்கைக் காட்டுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, ஈரானுக்கு எதிரான போரின்போது பிரிட்டன் தனது நாட்டில் உள்ள ராணுவ மற்றும் தளவாட வசதிகளைப் பயன்படுத்த அனுமதித்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையான IRGC-ஐ பிரிட்டன் தனது 'State Threats Act' சட்டத்தின் கீழ் கொண்டு வந்ததையும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

RAF
RAFreuters

இதன் தொடர்ச்சியாகவே பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எதிராக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், MI6 அமைப்புக்கு எதிராக உளவு நடவடிக்கைகள் தொடர்பான ஈரானிய சட்டங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் பிரிட்டனில் உள்ள RAF ஃபேர்ஃபோர்ட் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற பாதுகாப்புச் சம்பவமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த தளத்தில் உள்ள போர் விமானங்கள் மீது நாசவேலை அல்லது தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது..

RAF
மிரட்டல் விடுத்த ஈரான்.. திரும்பிய போர் விமானங்கள்.. அச்சத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா!