\
masoud pezeshkian
masoud pezeshkianANI

ஈரானுக்கு கிடைத்த மிகப்பெரிய புதையல்! இனி அமெரிக்கா குளோஸ்.. கம்பீரமாக தலை நிமிரும் ஈரானியர்கள்!

ஈரானுக்கு மிகப்பெரிய அளவிலான ஒரு புதையல் கிடைத்திருக்கிறது.
Published on
Summary

அமெரிக்கா ஈரானை நிர்மூலப்படுத்தும் நோக்கில் போரை நீட்டித்து, எரிசக்தி உள்கட்டமைப்புகளை சேதப்படுத்திய நிலையில், ஃபேர்ஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எரிவாயு வளம் ஈரானுக்கு புதிய உயிர் ஊட்டுகிறது. 73% மீட்பு விகிதத்தில் எடுக்கப்படும் இந்த வளம், தடைகள் மத்தியில் உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளையும் திறந்து, ஈரானியர்களுக்கு பொருளாதார, அரசியல் தன்னம்பிக்கையை அளிக்கும் என பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஈரான் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா, இன்று வரை போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த போரினால், ஈரானில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரானை நிர்மூலமாக்குவோம் என்று கூறிய அமெரிக்கா, அந்நாட்டை சூரையாடுவதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தது. ஆனால், ஈரான் வீழ்ந்துவிட்டது என்று உலக நாடுகள் ஒவ்வொரு முறை நினைக்கும்போதும், அது புது எழுச்சியுடன் எழுந்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தற்போதும் ஈரான் மீண்டெழுந்து, கம்பீரமாக நிற்கிறது.

iran oil field
iran oil fieldANI
masoud pezeshkian
‘மெக்கா’ ஒப்பந்தத்தில் ஈரான்.. இணைக்கும் சவூதி அரேபியா? கடும் கோபத்தில் அமெரிக்கா?

அதாவது, தெற்கு ஈரானில் உள்ள ஃபேர்ஸ் மாகாணத்தில், 7.5 ட்ரில்லியன் கன அடி அளவிலான இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஈரான அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய் வயலில், 5.7 ட்ரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவை வணிக ரீதியாக பிரித்தெடுக்க முடியும் என்றும், இது 73 சதவீத மீட்பு விகிததத்தின் அடிப்படையில் பிரித்தெடுக்கப்படுகிறது என்றும், ஈரான் கூறியுள்ளது.

இதுமட்டுமின்றி, இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் பிற மாசுகள் மிகக் குறைவாக உள்ள ஸ்வீட் கேஸ் வகையை சேர்ந்தது என்று கூறிய ஈரான், இதனை சுத்திகரிப்பதற்கான செலவும் குறைவு என்று தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமான உற்பத்தி வேகத்தில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு தங்கு தடையின்றி இயற்கை எரிவாயு எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

donald trump
donald trumpANI

அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் ஈரானின் பொருளாதாரத்திற்கும், ஏற்றுமதிக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த பிரம்மாண்டமான எரிவாயு கண்டுபிடிப்பு ஈரானுக்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

தேவையான முதலீடுகளும் தொழில்நுட்பமும் கிடைக்கும் பட்சத்தில், உள்நாட்டு எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த வளங்கள் ஈரானுக்குப் பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.

masoud pezeshkian
அழிக்கப்பட்ட தலைமை பயங்கரவாத முகாம்.. 15 மாதங்களில் புதுப்பிப்பு.. நிதியுதவி வழங்கிய பாகிஸ்தான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com