\
iran
iranReuters

மீண்டும் அதிகரித்த பதற்றம்! துவம்சம் ஆன USA-வின் சொத்து? இறங்கி அடித்த ஈரான்!

அமெரிக்காவின் நவீன போர் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

வளைகுடாவில் அமெரிக்காவின் நவீன ரக போர் விமானத்தை தாக்கியதோடு, இரண்டு விமான தளங்களின் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. வளைகுடா பகுதியில் பறந்த அமெரிக்காவின் F-16 ரக ஜெட் போர் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலத்த சேதமடைந்த விமானம், அருகில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, வீடியோவை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

donald trump
donald trumpreuters

ஆனால், வைளகுடாப் பகுதியில், அமெரிக்காவின் F-16 போர் விமானத்தை ஈரான் ராணுவம் தாக்கிச் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்ட தகவலை அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்கா் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், பக்ரைன் மற்றும் அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நிலத்தடியில் ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருவது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது குறித்து, தாம் எப்போதும் கவலைப்பட்டதில்லை என்றும், அந்நாட்டுடன் நிரந்தர அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தவே விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏனென்றால், அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் அல்லது அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் திறமையற்ற அதிபர் அமையக் கூடும் என்பதால், நிரந்தர ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக அவர் கூறியுள்ளார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

iran
போர் பதற்றத்தில் ஐரோப்பா! ராணுவத்தில் இணையும் இளவரசர்? ரஷ்யாவுக்கு எதிராகக் களமிறங்குகிறாரா?