\
Iran War Tensions:iPhones Float at Sea ,Crowds Rush In! Shocking Twist
ship in hormuz reuters

ஹார்முஸில் மூழ்கிய கப்பல்.. நடுக்கடலில் மிதக்கும் ஐபோன்கள்.. அள்ளிச் செல்லும் உள்ளூர் வாசிகள்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் UAE-க்கு சொந்தமான சரக்குக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
Published on: 

செய்தியாளர் : மீரா. M

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. போருக்கு முன்பு, உலகளாவிய எண்ணெய் மற்றும் LNG விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகச் சென்றது. இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 24-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானியப் படைகளால் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 6 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடித் தாக்குதலில் சரக்குக் கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, கடலில் ஐபோன்கள் மற்றும் விலை உயர்ந்த வாசனைத் திரவியப் பாட்டில்கள் மிதக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. கடலில் மிதந்த பொருட்களைச் சிறிய படகுகளில் வந்தவர்கள் சேகரிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் (UAE) சொந்தமானதாகக் கூறப்படும் இந்த சரக்குக் கப்பலில் சுமார் 2,500 சரக்குக் கொள்கலன்களைக் கொண்டிருந்தது. நேற்றைய தினம், கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்த பின்னர் மூழ்கியதாகக் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சிங்கப்பூரின் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் எப்படி மூழ்கியது என்பது தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC), அனுமதிக்கப்படாத பாதையில் பயணித்தபோது கப்பல் கடற்படை கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், கடல்சார் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது வெடிபொருள் தாக்குதலில் கப்பல் சேதமடைந்து தீப்பிடித்ததாகத் தெரிவித்துள்ளனர். எனவே, கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை.

ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் கப்பல் மீதான தாக்குதல்கள் சர்வதேசக் கடல் போக்குவரத்துக்கும், உலக எரிபொருள் விநியோகத்துக்கும் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

Iran War Tensions:iPhones Float at Sea ,Crowds Rush In! Shocking Twist
கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! பற்றி எரிந்த தீ.. ஈரான் அதிரடி எச்சரிக்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com