காசாவில் மீண்டும் இணைய சேவை! ”ஹமாசுடனான போர் மிக நீண்ட நாட்கள் நீடிக்கும்” - இஸ்ரேல் பிரதமர்

இணைய சேவை இழந்து தவித்த காசா பகுதியில் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் இணைய சேவையானது வழங்கப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.
இணைய சேவை
இணைய சேவைமுகநூல்

இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கி 23 வது நாளை எட்டியுள்ள நிலையில், அப்பகுதியில் தங்களின் அடிப்படை ஆதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள் மேலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். நாளுக்கு நாள் இறப்பு விகிதங்களும் , காயமடைந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறதே தவிர இருதரப்பினருக்கு இடையேயான போர் நின்றபாடில்லை.

காசா
காசா முகநூல்

பல்வேறு நாடுகளும் இப்போரை நிறுத்தும் படி அறிவுறுத்தியும் வருகின்றனர். மேலும், இஸ்ரேல் தாக்குதலுக்கு உட்பட்ட காசா பகுதி மக்கள் இணையவழி சேவையையும் இழந்து வெளி உலகத்தினுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டு தவிக்கின்றனர்.

இந்நிலையில், காசாவில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட தகவலில்,

“தொலைத்தொடர்பு கேபிள்கள் விமானப்படை தாக்குதலில் சேதமான நிலையில், பராமரிப்பு பணி முடிவடைந்து மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

கூடுதலாக இதற்கு முன்னதாக இணைய சேவை துண்டிக்கப்பட்ட அப்பகுதியில் இணைய சேவையை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதாமாக இஸ்ரேல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஷலோமா காரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட பதிவில், ”காஸா பகுதியில் இணைய சேவையை வழங்க எலான் மாஸ்க் முன்வந்துள்ளதால், ஸ்டார் லிங்க் உடனான அனைத்து தொடர்புகளும் முறியடித்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்து இருந்தார்.

இணைய சேவை
காசாவில் இணையதள சேவையை கொடுக்க முயலும் எலான் மஸ்க்.. தடுக்கும் இஸ்ரேல்

மேலும் இப்போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், “தரைப்படை தாக்குதலை இரண்டாவது கட்ட முற்றுகையாக பார்க்க வேண்டும். ஹமாசுடனான இந்த போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது “ என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காசாவில் இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்தும் , 229 பேர் ஹமாசால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டும் இருக்கின்றனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com