\
India's exports of defence equipment have increased
India's exports of defence equipment have increasedReuters

இந்தியா படைத்த மாபெரும் சாதனை.. வியந்து பார்க்கும் உலகநாடுகள்: ஏற்றுமதியில் முன்னேறி அசத்தல்!

இந்தியாவின் பாதுகாப்பு தடவாள ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
Published on: 
Summary

இந்தியா பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியில் சாதனை படைத்து, 2025–26 நிதியாண்டில் 38,424 கோடி ரூபாயை எட்டியது. HAL, BEL போன்ற பொதுத்துறை நிறுவனங்களுடன், டாடா, L&T போன்ற தனியார் நிறுவனங்களும் பங்கு பெற்றதால், உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை வியந்து பார்க்கின்றன.

இந்தியா நீண்ட காலமாக தனது ராணுவ தேவைகளுக்கு வெளிநாடுகளை சார்ந்தே இருந்து வந்தது. ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு தடவாளங்களை பெருமளவில் இறக்குமதி செய்தது. பின்னர் பொதுத்துறை நிறுவனங்களான HAL, BEL மூலம் மிகக் குறைந்த அளவில் வெடிமருந்துகள், பாராசூட்கள், சீருடைகள், சிறிய அளவிலான துப்பாக்கிகள் மற்றும் உதிரிபாகங்கள் ஆகியவை இலங்கை, நேபாளம், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த சூழலில் கடந்த 2011-ம் ஆண்டு ஈக்வடார் நாட்டிற்கு HAL நிறுவனத்தின் 'துருவ்' (Dhruv) ஹெலிகாப்டர்களும், மொரிஷியஸ் நாட்டிற்கு 'பாரகுடா' (Barracuda) ரோந்துக் கப்பலும் விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய பாதுகாப்பு தடவாள ஏற்றுமதியின் மிகப்பெரும் சாதனையாக கருதப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசு பாதுகாப்பு தடவாள ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்தது. அதன் காரணமாக 2013–14 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்றுமதி 686 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டு அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, டாடா, L&T, பாரத் ஃபோர்ஜ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இது போன்ற காரணங்களால் 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி 62.66% உயர்ந்து, வரலாறு காணாத வகையில் 38,424 கோடியை எட்டி சாதனை படைத்தது. இந்த நிலையில், 2028-29-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியை எட்டும் என்று பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் (Defence Secretary Rajesh Kumar Singh) கூறியுள்ளார்.

Defence Secretary Rajesh Kumar Singh
Defence Secretary Rajesh Kumar Singh

மேலும் பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளுடன் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை குறித்துப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான ஏற்றுமதி அனுமதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை தொடங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே உலகின் முக்கிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

India's exports of defence equipment have increased
அரபு கட்சிகளுக்கு அடுத்த ஷாக்: மீண்டும் பவர் சென்டராகும் நெதன்யாகு.. ட்விஸ்ட் கொடுத்த ஐசன்கோட்!