என்னது இந்தியர்களுக்கு Visa தேவையில்லையா... மலேசியா அரசின் அதிரடி Offer!

வரும் 1-ம் தேதி முதல் மலேசியா வருகை தரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மலேசியா
மலேசியாபுதிய தலைமுறை

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்வது மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் மலேசிய அரசு, வரும் ஆண்டுகளில் விசாவில் பல்வேறு வசதிகளை கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அந்நாட்டு அரசு அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

அதில் “இந்தியா மற்றும் சீனாவிலிருந்து முதலீட்டாளர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் விதமாக வரும் 1-ம் தேதி முதல் மலேசியாவில் விசா இன்றி 30 நாட்கள் தங்கலாம். இந்த திட்டம் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்” என்று அறிவித்துள்ளது.

மலேசியா
தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்ற குரங்குகள் திருவிழா...!

முன்னதாக தாய்லாந்து, இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளும் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் வருகை தரலாம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com